நாகர்கோவிலில் வெவ்வேறு சம்பவங்கள்: மோட்டார் சைக்கிள்கள் மோதி பெண் உள்பட 3 பேர் படுகாயம்


நாகர்கோவிலில் வெவ்வேறு சம்பவங்கள்: மோட்டார் சைக்கிள்கள் மோதி பெண் உள்பட 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 3 Jan 2020 3:45 AM IST (Updated: 3 Jan 2020 2:19 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் வெவ்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் பெண் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

நாகர்கோவில்,

நாகர்ேகாவில், வெட்டூர்ணிமடம் கேசவதிருப்பவபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜய். இவருைடய மனைவி நிஷா. இவர் கேசவதிருப்பவபுரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் நிஷா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் நிஷா சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

உடனே அருகில் நின்றவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றவரை தேடி வருகின்றனர்.

வெவ்வேறு சம்பவங்கள்

கொட்டாரம் மந்தாரம்புதூரை சேர்ந்தவர் பிரபாகரன் (31). இவர் ேமாட்டார் சைக்கிளில் நாகர்ேகாவில் செட்டிகுளம் சந்திப்பில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் பிரபாகரன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது.

இதேபோல திட்டுவிளை பகுதியை சேர்ந்த லாரன்ஸ் என்பவர் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் மோதியதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. விபத்தை ஏற்படுத்திவிட்டு மோட்டார் சைக்கிள் நிற்காமல் சென்று விட்டது.இந்த 2 சம்பவங்கள் குறித்தும் நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாா் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story