திருவல்லிக்கேணியில் மோட்டார் சைக்கிள் திருடிய பெண் கைது இன்னொரு பெண்ணுக்கு வலைவீச்சு
திருவல்லிக்கேணியில் மோட்டார் சைக்கிள் திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.
சென்னை,
சென்னை திருவல்லிக்கேணி தாயார் சாகிப் தெருவில் வசிப்பவர் யாசர் அராபத். இவர் தனது வீட்டின் வாசலில் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் நேற்று முன்தினம் இரவு திருட்டு போய்விட்டது.
இதுதொடர்பாக திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, 2 பெண்கள் கள்ளச்சாவி மூலம் மோட்டார் சைக்கிளை திருடிச் செல்வது தெரிய வந்தது.
இதை அடிப்படையாக வைத்து திருவல்லிக்கேணி ஜாம்பஜார் பகுதியை சேர்ந்த சந்தியா (வயது 19) என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரது தோழி மோனிஷா (20) தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது.
Related Tags :
Next Story