திருவாரூரில் கடும் பனிப்பொழிவு


திருவாரூரில் கடும் பனிப்பொழிவு
x
தினத்தந்தி 3 Jan 2020 10:00 PM GMT (Updated: 3 Jan 2020 6:10 PM GMT)

திருவாரூரில் நேற்று காலை கடும் பனிப்பொழிவு நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் விளக்குகளை ஒளிர விட்டப்படி சென்றனர்.

திருவாரூர், 

திருவாரூர் மாவட்டத்தில் பருவ மழை குறைந்து கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு பனிப்பொழிவு அதிகமாக நிலவியது. இதனால் காலை விடிந்த போதிலும் சூரிய வெளிச்சத்தை பனிப்பொழிவு மூடிய நிலையில் பனி மூட்டமாக காட்சி அளித்தது. இந்த பனிப்பொழிவு காலை 7 மணி வரை நீடித்ததால் சாலைகளில் வாகனங்களில் செல்பவர்கள் விளக்குகளை ஒளிர விட்டப்படி சென்றனர்.

இதேபோல் திருவாரூர் கமலாலயம் குளத்தின் நடுவே உள்ள நாகநாதர் கோவில் பனி மூட்டத்தின் நடுவே ரம்மியாக காட்சியளித்தது. இதனை அந்த வழியாக நடைபயிற்சி சென்றவர்கள் ரசித்த படி பார்த்தனர். மதியம் வரை வெயில் அடித்த போதிலும் சற்று குளிர்ச்சியான தட்ப வெப்ப நிலை நிலவியது. பனிப்பொழிவு காரணமாக உல்லன் ஆடைகள் விற்பனை படுஜோராக நடந்தது.

Next Story