மின் விளக்குகளை மறைக்கும் மரக்கிளைகளை அகற்றும் பணி தொடக்கம் புகார் தெரிவிக்க மாநகராட்சி ஏற்பாடு
சாலையோர மின் விளக்குகளை மறைக்கும் வகையிலும் உள்ள மரக்கிளைகளை அகற்றவும் புகார் தெரிவிக்கவும் மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பெருநகர சென்னை மாநகராட்சியின் முக்கிய சாலைகள் மற்றும் உட்புற சாலைகளின் ஓரங்களில் சுமார் 1 லட்சத்து 61 ஆயிரம் மரங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான மரங்கள் மிக உயரமாக வளர்ந்து படர்ந்த கிளைகளுடன் காணப்படுகிறது. போக்குவரத்துக்கு இடையூறாகவும், சாலையோர மின் விளக்குகளை மறைக்கும் வகையிலும் உள்ள மரக்கிளைகளை அகற்றும் பணிகள் 11 பூங்கா மேற்பார்வையாளர்கள் மற்றும் 358 பணியாளர்கள் மூலம் கூடுதலாக மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்த மரக்கிளைகளை அகற்றும் பணியை விரைந்து செய்ய கடந்த ஆண்டு மாநில பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கீட்டில், ரூ.20 லட்சம் வீதம் ரூ.1.20 கோடி மதிப்பில் 6 ‘ஹைட்ராலிக்’ மூலம் இயங்கும் மரக்கிளைகளை அகற்றும் எந்திரங் கள் பயன்பாட்டுக்கு வழங் கப்பட்டது. இதன்மூலம் மரக்கிளை களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. போக்குவரத்துக்கு இடையூறாகவும், சாலையோர மின் விளக்குகளை மறைக்கும் வகையில் உள்ள மரக் கிளைகளை அகற்றுவது தொடர் பான புகார்களை பொதுமக்கள் அந்தந்தப் பகுதிக்கு உட்பட்ட மண்டல அலுவலகங்களில் நேரிலோ, தொலைபேசி, மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 24 மணி நேரமும் இயங்கும் 1913 என்ற புகார் எண்ணிலும் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story