மணிகண்டம் அருகே, பிளஸ்-1 மாணவி கற்பழித்து கொலை வழக்கில் காதலன் கைது -மேலும் 3 பேரிடம் விசாரணை


மணிகண்டம் அருகே, பிளஸ்-1 மாணவி கற்பழித்து கொலை வழக்கில் காதலன் கைது -மேலும் 3 பேரிடம் விசாரணை
x
தினத்தந்தி 4 Jan 2020 3:30 AM IST (Updated: 4 Jan 2020 12:33 AM IST)
t-max-icont-min-icon

மணிகண்டம் அருகே பிளஸ்-1 மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், அவருடைய காதலனை போலீசார் கைது செய்தனர். மேலும் காதலனின் நண்பர்கள் 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மணிகண்டம்,

திருச்சி மாவட்டம், மணிகண்டம் அருகே வடக்கு நாகமங்கலத்தில் உள்ள காட்டுப்பகுதியில், நேற்று முன்தினம் ஒரு சிறுமி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தாள். இதை பார்த்த அந்த பகுதியினர், மணிகண்டம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் அந்த சிறுமி அதே பகுதியை சேர்ந்த 16 வயது பிளஸ்-1 மாணவி என்பது தெரியவந்தது.

இதையடுத்து மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் அந்த மாணவியும், இனாம்மாத்தூரை சேர்ந்த சேகர் மகன் மதிக்குமாரும்(வயது 22) காதலித்தது ெதரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர்.

இந்நிலையில் மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து மதிக்குமாரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த மாணவியை மதிக்குமார் கற்பழித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. மேலும் மதிக்குமார் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாக, போலீசார் தெரிவித்ததாவது;-

மதிக்குமார் நாகமங்கலம் அருகே உள்ள குன்னத்தூரில் கூலி வேலை செய்து வந்துள்ளார். அப்போது அந்த வழியாக பள்ளிக்கு சென்று வந்த மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அந்த மாணவி மற்றொரு வாலிபருடன் பழகியது, மதிக்குமாருக்கு தெரியவந்தது. இதனால் அவர் அந்த மாணவியை கண்டித்தார். ஆனால் அந்த மாணவி, மற்றொரு வாலிபருடன் பழகுவதை நிறுத்தவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மதிக்குமார், சம்பவத்தன்று அந்த மாணவியை காட்டுப்பகுதிக்கு வரவழைத்துள்ளார்.அங்கு அவர், மாணவியை கற்பழித்துள்ளார். பின்னர், மற்றொரு வாலிபருடன் பழகுவதை நிறுத்துமாறு மாணவியிடம் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மதிக்குமார், அருகே கிடந்த கல்லை எடுத்து, மாணவியின் தலையில் தாக்கியுள் ளார். இதில் மாணவி மயங்கி விழுந்தார்.

இதையடுத்து மாணவி அணிந்திருந்த துப்பட்டாவால், அவருடைய கழுத்தை இறுக்கியுள்ளார். இதில் மாணவி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து, துப்பட்டாவால் மாணவியின் முகத்தை சுற்றி கட்டிவிட்டு, மதிக்குமார் அங்கிருந்து தனது வீட்டிற்கு சென்றுவிட்டார், என்று போலீசார் தெரிவித்தனர்.இதையடுத்து மணிகண்டம் போலீசார், மதிக்குமாரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் அவரது நண்பர்களும் சேர்ந்து மாணவியை கற்பழித்து கொலை செய்தனரா? என்ற சந்தேகத்தின்பேரில், அவருடைய நண்பர்கள் 3 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story