தஞ்சை மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களை தி.மு.க. கைப்பற்றியது - 2 இடங்களை அ.தி.மு.க. தக்க வைத்தது
தஞ்சை மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களை தி.மு.க. கைப்பற்றியது. 2 இடங்களை அ.தி.மு.க. தக்க வைத்தது.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இவற்றில் பதிவான வாக்குகள் 14 இடங்களில் எண்ணப்பட்டன. நேற்று காலையில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தது. தேர்தல் முடிவில் 11 ஊராட்சி ஒன்றியங்களில் தி.மு.க.வினர் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஒன்றியக்குழு தலைவர் பதவியை கைப்பற்றியுள்ளனர்.
2 ஒன்றியங்களில் மட்டுமே அ.தி.மு.க.வினர் தலா ஒரு வாக்கு கூடுதலாக பெற்று ஒன்றியக்குழு தலைவர் பதவியை தக்க வைத்து கொண்டனர்.ஒரு ஒன்றியத்தில் மட்டும் இழுப்பறி நிலை ஏற்பட்டுள்ளது.
அம்மாப்பேட்டை
அம்மாப்பேட்டை ஒன்றியத்தில் 17 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க.-12, அ.தி.மு.க.-3, காங்கிரஸ்,, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.
கும்பகோணம் ஒன்றியத்தில் 27 வார்டுகள் உள்ளன. தி.மு.க.-18, அ.தி.மு.க.-6, பா.ஜ.க.-1, சுயேச்சைகள் 2 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
திருப்பனந்தாள்
திருவிடைமருதூர் ஒன்றியத்தில் மொத்தம் 22 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க.-14, அ.தி.மு.க.-6, ம.தி.மு.க. மற்றும் த.மா.கா. தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
திருப்பனந்தாள் ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 17 வார்டுளில் தி.மு.க. 10 இடங்களிலும், அ.தி.மு.க. மற்றும் காங்கிரஸ் தலா 2 இடங்களிலும், அ.ம.மு.க. ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
திருவையாறு ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில் தி.மு.க. 10 இடங்களிலும் அ.தி.மு.க. 4 இடங்களிலும், தே.மு.தி.க., பா.ஜ.க. தலா ஒரு இடத்திலும், அ.ம.மு.க.-1 இடத்திலும், சுயேச்சை 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
பாபநாசம் ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 21 வார்டுகளில் தி.மு.க.-12 இடங்களிலும், அ.தி.மு.க. 4 இடங்களிலும், அ.ம.மு.க. 2 இடங்களிலும், தே.மு.தி.க., த.மா.கா. ஆகியவை தலா 1 இடத்திலும், சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.
தஞ்சை
தஞ்சை ஒன்றியத்தில் மொத்தம் 29 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க.-18, அ.தி.மு.க.-8, அ.ம.மு.க.-1, சுயேச்சை-2 இடங்களிலும்வெற்றி பெற்றுள்ளன.
சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் 16 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க.-10, அ.தி.மு.க.-6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ேபராவூரணி ஒன்றியத்தில் 15 வார்டுகள் உள்ளன. இதில் அ.தி.மு.க.-7, தி.மு.க.-6, பா.ஜ.க. மற்றும் சுயேச்சை தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
மதுக்கூர் ஒன்றியத்தில் 13 வார்டுகள் உள்ளன. இதில் அ.தி.மு.க.-6, தி.மு.க.-5, பா.ஜ.க. மற்றும் சுயேச்சை தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளன.
பட்டுக்கோட்டை ஒன்றியத்தில் 19 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க.-13, அ.தி.மு.க.-4, பா.ஜ.க. மற்றும் சுயேச்சை தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றனர்.
திருவோணம்
திருவோணம் ஒன்றியத்தில் 15 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க.-7, அ.தி.மு.க.-6, அ.ம.மு.க.-2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த ஒன்றியத்தில் தலைவர் பதவியை கைப்பற்றுவதில் இழுபறி நிலை உருவாகி உள்ளது. தி.மு.க.விற்கு, ஒரு வேட்பாளரின் ஆதரவு தேவை இருப்பதால் தலைவர் பதவியை பிடிக்க அ.ம.மு.க.வும் ஆதரவு பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பூதலூர் ஒன்றியத்தில் 16 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க.-8, அ.தி.மு.க.-4, அ.ம.மு.க.-2 இடங்களிலும், பா.ஜ.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் தலா 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
ஒரத்தநாடு ஒன்றியத்தில் 31 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க.-15, அ.தி.மு.க.-10, காங்கிரஸ், பா.ஜ.க., இந்திய கம்யூனிஸ்டு, அ.ம.மு.க. தலா ஒரு இடத்திலும், சுயேச்சை 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
Related Tags :
Next Story