சேடபட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை கைப்பற்றிய தி.மு.க.
சேடபட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றி உள்ளது.
உசிலம்பட்டி,
சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 12 வார்டுகளில் தி.மு.க. வெற்றி பெற்றதால் தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது.
சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் வெற்றி பெற்ற ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் விவரம் வருமாறு:-
1-வது வார்டு மகேசுவரி (சுயேச்சை), 2-வது வார்டு ராணி(தி.மு.க.), 3-வது வார்டு பூப்பாண்டி(தி.மு.க.), 4-வது வார்டு கீதா (தி.மு.க.), 5-வது வார்டு பாண்டியம்மாள் (தி.மு.க.), 6-வது வார்டு ஜெயச்சந்திரன்(தி.மு.க.), 7-வது வார்டு வேம்படியான்(தி.மு.க.), 8-வது வார்டு அழகுத்தாய் (அ.தி.மு.க.), 9-வது வார்டு முத்துமாரி(அ.தி.மு.க.), 10-வது வார்டு செல்வபிரகாஷ் (தி.மு.க.), 11-வது வார்டு பாண்டியன் (பா.ஜ.க.), 12-வது வார்டு லட்சுமி (தி.மு.க.), 13-வது வார்டு பாண்டியராஜன்(அ.தி.மு.க.), 14-வது வார்டு ஜெயமீனா (தி.மு.க.), 15-வது வார்டு ஜோதி (தி.மு.க.), 16-வது வார்டு ஜெயமணி(தி.மு.க.), 17-வது வார்டு கார்த்திகைசெல்வி (தி.மு.க.), 18-வது வார்டு குபேந்திரன் (சுயேச்சை) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் 12 வார்டுகளை தி.மு.க. கைப்பற்றி உள்ளது. 4 வார்டுகளை அ.தி.மு.க. கூட்டணியும், 2 சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளதால் சேடபட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது.
சேடபட்டியில் 2 மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பதவியை தங்கம்(தி.மு.க), சாந்தா திசைகரன்(தி.மு.க.) ஆகிய 2 பேர் கைப்பற்றி உள்ளனர்.
Related Tags :
Next Story