வேலை இழந்த விரக்தியில் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து குதித்து பெண் தற்கொலை
காந்திவிலியில் வேலை இழந்த விரக்தியில் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
மும்பை,
மும்பை காந்திவிலி மேற்கு, சார்கோப் பகுதியில் ராக் அவென்யு என்ற 8 மாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் தாய், தம்பியுடன் வசித்து வந்த பெண் டிம்பிள்(வயது40). திருமணம் ஆகாத இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் வேலையை இழந்து உள்ளார்.
இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் டிம்பிள் கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு சென்றார். பின்னர் திடீரென அங்கு இருந்து கீழே குதித்தார். இதில், படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த டிம்பிளை போலீசார் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.
இந்த சம்பவம் குறித்து சார்கோப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலை இழந்த விரக்தியில் பெண் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்த சம்பவம் காந்திவிலி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story