கன்னியாகுமரியில் குளிர்பானத்தை தரையில் கொட்டி வணிகர் சங்கத்தினர் போராட்டம் வெள்ளையன் பங்கேற்பு


கன்னியாகுமரியில் குளிர்பானத்தை தரையில் கொட்டி வணிகர் சங்கத்தினர் போராட்டம் வெள்ளையன் பங்கேற்பு
x
தினத்தந்தி 5 Jan 2020 4:30 AM IST (Updated: 5 Jan 2020 12:46 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் குளிர்பானத்தை தரையில் கொட்டி வணிகர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். இதில் வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள்ளையன் கலந்து கொண்டார்.

கன்னியாகுமரி,

சில்லறை வணிகத்தை அன்னிய வெளிநாட்டு கம்பெனிகள் ஆக்கிரமித்து இந்தியாவை வெளிநாட்டு பொருட்களின் சந்தையாக மாற்றிவிட்டது என்றும், இதை தடுக்க உள்நாட்டு உற்பத்தி பொருட்கள் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் மாநில தலைவர் வெள்ளையன் தலைமையில் கடந்த 1-ந் தேதி சென்னையில் விழிப்புணர்வு பயணம் தொடங்கியது.

இந்த பயணம் விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி, மதுரை, அருப்புக்கோட்டை, தூத்துக்குடி வழியாக கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு நேற்று நிறைவடைந்தது.

போராட்டம்

தொடர்ந்து அன்னிய வர்த்தக நுகர்பொருட்களான பிஸ்கட், குளிர்பானங்கள், டீ பாக்கெட் போன்றவைகளை தரையில் கொட்டியும், உடைத்தும் போராட்டம் நடத்தினர். போராட்டதுக்கு குமரி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் டேவிட்சன் தலைமை தாங்கினார். கன்னியாகுமரி காந்திஜி கடை வியாபாரிகள் சங்க தலைவர் தம்பி தங்கம் முன்னிலை வகித்தார். இதில் மாநில தலைவர் வெள்ளையன் கலந்து கொண்டார்.

மேலும் மாநில நிர்வாகிகள் ராஜாராம், சண்முகசுந்தரம், அர்ஜூனன், மாவட்ட நிர்வாகிகள் ஜார்ஜ், கதிரேசன், ராஜாமணி, அருள்ராஜ், ஜாண்சன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story