தோழியின் தந்தை இறப்பிற்கு செல்ல எதிர்ப்பு தெரிவித்ததால் வி‌‌ஷம் குடித்து இளம்பெண் தற்கொலை


தோழியின் தந்தை இறப்பிற்கு செல்ல எதிர்ப்பு தெரிவித்ததால் வி‌‌ஷம் குடித்து இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 5 Jan 2020 5:15 AM IST (Updated: 5 Jan 2020 1:31 AM IST)
t-max-icont-min-icon

தோழியின் தந்தை இறப்பிற்கு செல்ல எதிர்ப்பு தெரிவித்ததால் இளம்பெண் ஒருவர் வி‌‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கோத்தகிரி, 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். கூலித்தொழிலாளி. இவருடைய மகள் பிரியா (வயது24). துபாயில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்து உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுமுறையில் கோத்தகிரி இந்திரா நகரில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை பிரியா தன்னுடன் வெளிநாட்டில் பணி புரிந்து வரும் சென்னையை சேர்ந்த தோழி ஒருவரது தந்தை இறந்து விட்டதாகவும், அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக சென்னைக்கு செல்ல வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு அவரது தந்தை இரவு நேரத்தில் அவ்வளவு தொலைவிற்கு தனியாக செல்ல வேண்டாம் என கூறி அனுமதி அளிக்க மறுத்ததோடு, எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த பிரியா, வீட்டில் உருளை கிழங்கு தோட்டத்திற்கு அடிப்பதற்காக வாங்கி வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (வி‌‌ஷம்) எடுத்து குடித்துள்ளார். இதனால் அவர் வாயில் நுரைதள்ளிய நிலையில் மயங்கி கிடந்தார். இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பிரியா இறந்தார்.

இதுகுறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னையில் உள்ள தோழியின் தந்தை இறப்பிற்கு துக்கம் விசாரிக்க செல்ல எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தைஏற்படுத்தி உள்ளது.

Next Story