சங்கரன்கோவிலில் ஆடு ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்
சங்கரன்கோவிலில் ஆடு ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நெல்லை,
நெல்லை ராமையன்பட்டியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மண்டல அளவில் பண்ணையாளர்களுக்கு கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கியது. அமைச்சர் ராஜலட்சுமி கருத்தரங்கத்தை தொடங்கி வைத்தார். கால்நடை மருத்துவ கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சியில் 29 அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. பல்வேறு ஆடு இனங்கள், சிப்பிப்பாறை நாய், ராஜபாளையம் நாய் உள்ளிட்டவைகள் கண்காட்சியில் இடம் பெற்று இருந்தன.
இந்த கருத்தரங்கம் நிறைவு விழா நேற்று மாலை நடந்தது. நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணை வேந்தர் பாலச்சந்திரன் முன்னிலை வகித்தார். நெல்லை கால்நடை மருத்துவ கல்லூரி முதல்வர் பழனிசாமி வரவேற்று பேசினார். கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பதிவாளர் டென்சிங் ஞானராஜ் திட்ட விளக்க உரையாற்றினார்.
தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இணைவேந்தருமான உடுமலை ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அவர், பண்ணையாளர்களுக்கு இடுபொருட்கள், பயனாளிகளுக்கு கோழிக்கூண்டுகளை வழங்கினார்.
அப்போது அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-
விலையில்லா ஆடு, மாடுகள்
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2023 விஷன் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் ஏழை எளிய மக்களை மேம்படுத்தும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஏழை மக்களுக்கு விலையில்லா மாடுகள், ஆடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. பல கிராமங்களில் கால்நடை மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, கால்நடைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
சேலத்தில் 1,000 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.550 கோடி திட்ட மதிப்பீட்டில் கால்நடை பூங்கா தொடங்கப்படுகிறது. அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதன் மூலம் நாட்டின கால்நடைகள் பராமரிப்பு மற்றும் உற்பத்தி திறன் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆடு ஆராய்ச்சி மையம்
சங்கரன்கோவிலில் ஆடு ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என அமைச்சர் ராஜலட்சுமி கோரிக்கை வைத்துள்ளார். அவர் கோரிக்கை பரிசீலனை செய்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதல் பெறப்படும். அதன் பிறகு சங்கரன்கோவிலில் ஆடு ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் அம்மா ஆம்புலன்ஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் மூலம் கிராமங்களுக்கு சென்று கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 1962 என்ற எண்ணை அழைத்தால் ஆம்புலன்ஸ் சேவை கிராமத்துக்கு வரும். இந்த சேவையை இதுவரை 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்தி உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர்கள்- எம்.பி.க்கள்
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி, எம்.பி.க்கள் முத்துக்கருப்பன், விஜிலா சத்யானந்த், எம்.எல்.ஏ.க்கள் ரெட்டியார்பட்டி நாராயணன், மனோகரன், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுதாபரமசிவன், நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், முன்னாள் மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா, ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, நெல்லை கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, பகுதி செயலாளர் ஜெனி, ஒன்றிய செயலாளர் மருதூர் ராமசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story