திருப்பத்தூர் அருகே, கோவில் உண்டியலை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு
திருப்பத்தூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து ரூ.1 லட்சம் திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூரை அடுத்த சித்தேரி கிராமத்தில் மாரியம்மன், பொன்னியம்மன், காளியம்மன், மற்றும் ஓம்சக்தி கோவில்கள் உள்ளது. நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள மின்கம்பத்தில் ஏறி மின்சாரத்தை துண்டித்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது.
இதனை பயன்படுத்திய மர்ம நபர்கள் கோளவிலில் உள்ள உண்டியலின் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த ரூ.1 லட்சத்தை திருடி சென்றனர்.
மேலும் மர்ம நபர்கள் சித்தேரி சுடுகாட்டில் நள்ளிரவில் பரிகாரம் பூஜை செய்து விட்டு சென்றுள்ளனர். அங்கு எலுமிச்சைபழம், மண்பானை, மண்டை ஓடு எலும்புகள் இருந்தது.
இதுகுறித்து ஊர் நாட்டாமை பாண்டியன் திருப்பத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story