பரப்பாடி அருகே, வி‌‌ஷம் குடித்து பெண் தற்கொலை


பரப்பாடி அருகே, வி‌‌ஷம் குடித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 6 Jan 2020 4:15 AM IST (Updated: 6 Jan 2020 1:05 AM IST)
t-max-icont-min-icon

பரப்பாடி அருகே வி‌‌ஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

இட்டமொழி, 

பரப்பாடி அருகே உள்ள ஆனிகுளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சுப்பையா (வயது 63) விவசாயி. இவருடைய மனைவி வள்ளியம்மாள் (61). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். ஒரு மகள் திருமணம் முடிந்து வெளியூரில் கணவருடன் வசித்து வருகிறார்.

வள்ளியம்மாள் பல மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லையாம். இதனால் ஏற்பட்ட மருத்துவ செலவை நினைத்து வள்ளியம்மாள் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சுப்பையா தனது மகள், மகனுடன் வயலுக்கு சென்றுவிட்டார். பின்னர் மாலையில் அனைவரும் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது, வள்ளியம்மாள் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர் அருகே வி‌‌ஷ பாட்டிலும் கிடந்தது.

இதுகுறித்து வடக்கு விஜயநாராயணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ‌ஷாஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். வள்ளியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில், வள்ளியம்மாள் வி‌‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story