அரியலூர் மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா
அரியலூர் மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.ஆயிரத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழாவினை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், பொய்யூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னவளையம் ஆகிய கிராமங்களில் பொது வினியோக திட்ட அங்காடிகளில் தமிழக முதல்- அமைச்சரின் ஆணையின்படி, பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா கலெக்டர் ரத்னா தலைமையில் நடந்தது. ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.ஆயிரத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி- சேலைகளையும் வழங்கி பேசுகையில், தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 2 அடி நீளமுள்ள கரும்பு துண்டு, தலா 20 கிராம் முந்திரி, திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் மற்றும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.ஆயிரமும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் செயல்படும் 440 பொதுவினியோத் திட்ட அங்காடிகளில் இணைக்கப்பட்டுள்ள 2,28,736 குடும்ப அட்டைதாரர்களுக்கு முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்பு, சர்க்கரை மற்றும் பச்சரிசியுடன், தலா ரூ.ஆயிரம் வீதம் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி- சேலைகள் வழங்கப்படுகிறது.
சுழற்சி முறையில் வழங்கப்படும்
மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்களை பொதுமக்கள் சிரமமின்றி பெறுவதற்கு ஏதுவாக முதல் நாள் முழுநேர ரேஷன் கடைகளில் 1,000 குடும்ப அட்டைகளுக்கும், 2-ம் நாள் முதல் 800 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகளில் ஒரு நாளைக்கு 300 குடும்ப அட்டைகள் என சுழற்சி முறையில் வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி அரியலூர் மாவட்ட குடும்ப அட்டைதாரர்கள் வருகிற 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை 4 நாட்களிலும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம். இதில் சுழற்சி முறையில் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்கள் 13-ந் தேதி பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம் என்றார். விழாவில் வட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) பாலாஜி, உடையார்பாளையம் கோட்டாட்சியர் பூங்கோதை, ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் கலைவாணன், ஜெயங்கொண்டம் கூட்டுறவு சங்க தலைவர் ஜெகன்ராஜ், மாவட்ட துணை செயலாளர் தங்க பிச்சைமுத்து, மாவட்ட அம்மா பேரவை மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story