35 ஏ.டி.எம். எந்திரங்களில் இருந்து ரூ.4 கோடி அபேஸ் செய்த ஊழியர் கைது - தானேயில் சிக்கினார்
35 ஏ.டி.எம். எந்திரங்களில் இருந்து ரூ.4 கோடி அபேஸ் செய்த ஊழியரை போலீசார் தானேயில் வைத்து கைது செய்தனர்.
மும்பை,
நவிமும்பை கோபர்கைர்னே பகுதியில் உள்ள வங்கி ஏ.டி.எம்.களுக்கு தனியார் பாதுகாப்பு நிறுவனம் சார்பில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டு எந்திரத்தில் நிரப்பப்பட்டு வருகிறது. சம்பவத்தன்று நவிமும்பை பகுதியில் தனியார் நிறுவனம் மூலம் நிரப்பப்பட்ட 35 ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் குறைவாக இருப்பது வங்கி மேலாளருக்கு தெரியவந்தது.
இது தொடர்பாக அவர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், பாதுகாப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சச்சின் வாக் என்ற ஊழியர் தான், கடந்த மாதம் 11-ந்தேதியில் இருந்து 13-ந்தேதி வரையில் வங்கி ஏ.டி.எம் மைய எந்திரத்தின் ரகசிய நம்பர் மூலம் 35 ஏ.டி.எம். எந்திரங்களை திறந்து ரூ.3 கோடியே 96 லட்சம் அளவில் அபேஸ் செய்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை தேடி வந்தனர்.
இந்தநிலையில், அவர் தானேயில் பதுங்கி இருப்பதாக கோபர்கைர்னே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று ஓட்டலில் பதுங்கி இருந்த சச்சின் வாக்கை பிடித்து கைது செய்தனர். அவர் அபேஸ் செய்த பணத்தை பறிமுதல் செய்ய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story