மாவட்ட செய்திகள்

திசையன்விளையில் துணிகரம்: கோவில், பள்ளிவாசலில் உண்டியல் பணம் திருட்டு - மர்மநபர்களுக்கு வலைவீச்சு + "||" + Venture in the vector space Temple, Mosque bill Theft of money

திசையன்விளையில் துணிகரம்: கோவில், பள்ளிவாசலில் உண்டியல் பணம் திருட்டு - மர்மநபர்களுக்கு வலைவீச்சு

திசையன்விளையில் துணிகரம்: கோவில், பள்ளிவாசலில் உண்டியல் பணம் திருட்டு - மர்மநபர்களுக்கு வலைவீச்சு
திசையன்விளையில் கோவில், பள்ளிவாசலில் உண்டியல் பணத்தை மர்மநபர்கள் திருடி சென்று உள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
திசையன்விளை, 

திசையன்விளை நாடார் தெற்கு தெருவில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு இந்த கோவிலின் உண்டியலை உடைத்து பணத்தை மர்மநபர்கள் திருடி உள்ளனர். இதேபோல் அருகில் உள்ள பள்ளிவாசலிலும் மர்மநபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை அள்ளி சென்று உள்ளனர்.

மேலும் செக்கடி தெருவில் உள்ள முருகன் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து உள்ளனர். ஆனால் அங்கு உண்டியல் பணம் எதையும் கைவரிசை காட்டாமல் திரும்பி சென்று இருக்கின்றனர்.

இதுகுறித்து அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் நிர்வாகி இசக்கிமுத்து, பள்ளிவாசல் நிர்வாகி இன்சார், முருகன் கோவில் நிர்வாகி சுந்தரம் ஆகியோர் திசையன்விளை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர். இந்த துணிகர திருட்டு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவில், பள்ளிவாசலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ‘கோவில், மசூதி, தேவாலய நிகழ்ச்சிகளை 31–ந்தேதி வரை நிறுத்தி வையுங்கள்’ கலெக்டர் சந்தீப்நந்தூரி வேண்டுகோள்
கோவில், மசூதி, தேவாலய நிகழ்ச்சிகளை வருகிற 31–ந்தேதி வரை நிறுத்தி வையுங்கள்’ என்று மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பிரசாத கடையில் தீ ஊழியர்கள் உடனே அணைத்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பிரசாத கடையில் ஏற்பட்ட தீயை ஊழியர்கள் உடனே அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
3. தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் மாசிமக தேரோட்டம்
தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் மாசிமக தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
4. கோவில்களை தொல்லியல்துறை கையகப்படுத்துவது ஏன்? - வானதி சீனிவாசன் விளக்கம்
கோவில்களை மத்திய தொல்லியல்துறை கையகப்படுத்துவது ஏன்? என்று பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.
5. இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்
இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.