தேர்தல் முன்விரோதத்தில், ஊராட்சி செயலர் மீது தாக்குதல்
சிவகங்கை அருகே தேர்தல் முன்விரோதத்தில் ஊராட்சி செயலர் தாக்கப்பட்டார்.
சிவகங்கை,
சிவகங்கை ஒன்றியத்திற்கு உட்பட்டது அல்லூர் ஊராட்சி மன்றம். இங்கு செயலாளராக பணிபுரிந்து வருபவர் பாலமுருகன். நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதே கிராமத்தை சேர்ந்த 2 பேர் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டனர்.
இதில் வெற்றிபெற்ற வேட்பாளருக்கு ஆதரவாக பாலமுருகன் தேர்தலின்போது செயல்பட்டதால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக நேற்று காலை 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றுபவர்களை கணக்கெடுக்கும் பணிக்காக சென்ற பாலமுருகனை 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து தாக்கினார்களாம்.
இதில் காயம்அடைந்த பாலமுருகனை சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.இது தொடர்பாக சிவகங்கை தாலுகா இன்ஸ்பெக்டர் சீராளன் வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்திவருகிறார்.
Related Tags :
Next Story