தாட்கோ திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
தாட்கோ திட்டங்களில் பயன் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கூறியுள்ளார். இதுகுறித்து கலெக்டர் கண்ணன் ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர்,
மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதி திராவிடர்கள், பழங்குடியினர்களுக்காக செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது வரம்பு 18 முதல் 65 வரை ஆகும்.
குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.1 லட்சம் ஆகும். நிலம் வாங்கும் திட்டம், நிலம் மேம்பாட்டு திட்டம், துரித மின் இணைப்புதிட்டம், தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத்திட்டம், சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி மானியம், கலெக்டரின் விருப்ப நிதி.
மேலாண்மை இயக்குனர் விருப்பநிதி, தாட்கோதலைவர் நிதி, இந்தியகுடிமைப்பணி தமிழ்நாடு தேர்வாணையத் தொகுதி-1 முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மை தேர்வு எழுதுவதற்கான நிதியுதவி, சட்டப்பட்டதாரிகள், பட்டயக் கணக்கர் செலவுகணக்கர், நிறுவனசெயலர் ஆகியோர்களுக்கு அலுவலகம் அமைக்க நிதியுதவி ஆகிய திட்டத்திற்கு திட்டத் தொகையில் ஒரு லட்சத்திற்கு ரூ.30 ஆயிரம் வீதம் அதிகபட்சமாக ரூ.2லட்சத்து 25 ஆயிரம் வரை மானியத்துடனான வங்கிக் கடன் வழங்க பரிந்துரைக்கப்படுகிறது.
மேற்கண்ட அனைத்துத் திட்டங்களுக்கும் தாட்கோ இணையதள முகவரி http:// application.tahtco.com மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் பற்றிய முழு விவரங்கள் உள்ளிட்ட தேவைப்படும் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். அந்த விவரங்களை இணையதளத்தில் கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பம் பதிவேற்றம் செய்யப்பட்டவுடன் ஒப்புகை ரசீது விண்ணப்பதாரருக்கு வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறுவதற்கு அறிவிக்கப்பட்ட நாட்களில் 24 மணிநேரமும் பதிவு செய்யலாம். மேலும், விண்ணப்பங்களை மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் பதிவு செய்யலாம். மேலும், இதற்கான விண்ணப்பம் ஒன்றுக்கு பயனாளியிடமிருந்து ரூ.60 வசூல் செய்யப்படும். விண்ணப்பம் பதிவேற்றம் செய்யப்பட்டவுடன் ஒப்புகை ரசீது விண்ணப்பதாரருக்கு வழங்கப்படும். விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்தோ, நகலினையோ, கைப்பிரதி விண்ணப்பங்களையோ சமர்ப்பிக்க வேண்டியதில்லை
இவ்வாறு கூறியுள்ளார்.
Related Tags :
Next Story