கிரு‌‌ஷ்ணகிரியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 154 மனுக்கள் குவிந்தன


கிரு‌‌ஷ்ணகிரியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 154 மனுக்கள் குவிந்தன
x
தினத்தந்தி 7 Jan 2020 3:45 AM IST (Updated: 7 Jan 2020 12:53 AM IST)
t-max-icont-min-icon

கிரு‌‌ஷ்ணகிரியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 154 மனுக்கள் குவிந்தன.

கிரு‌‌ஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடந்தது. இதையொட்டி உள்ளாட்சி தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தது. இதன் காரணமாக திங்கட்கிழைதோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தேர்தல் முடிந்ததை தொடர்ந்து தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. இதனால் கிரு‌‌ஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்கள் குடிநீர் வசதி, மின்சார வசதி, பட்டா, கல்வி உதவித்தொகை, ஓய்வூதிய தொகை, இலவச தையல் எந்திரம், சலவை பெட்டி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 154 மனுக்களை கொடுத்தனர்.

மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமமூர்த்தி, உதவி ஆணையர் (கலால்) முரளி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஓசூர் அரசு பட்டு வளர்ப்பு பயிற்சி மையத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் 26 மாவட்டங்களை சேர்ந்த முதன்மை பயிற்றுனர்களான 130 சமூக வல்லுனர்களுக்கு புத்தாக்க பயிற்சி நடந்தது. இதை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி தொடங்கி வைத்து பயிற்சி கையேட்டை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட துணை கலெக்டர் செந்தில்குமாரி, துணை கலெக்டர் நாராயணன், இணை இயக்குனர் மதுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story