மத்திய அரசை கண்டித்து புதுச்சேரியில் நாளை முழு அடைப்பு - அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு


மத்திய அரசை கண்டித்து புதுச்சேரியில் நாளை முழு அடைப்பு - அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு
x
தினத்தந்தி 7 Jan 2020 5:00 AM IST (Updated: 7 Jan 2020 1:54 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளர் சட்டங்களை சிதைப்பதாக மத்திய அரசை கண்டித்து புதுச்சேரியில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

புதுச்சேரி, 

நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் போராட்டம் அறிவித்துள்ளன.

புதுவை அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள்சேதுசெல்வம்(ஏ.ஐ.டி.யு.சி.), ஞானசேகரன் (ஐ.என்.டி.யு.சி.), சீனுவாசன் (சி.ஐ.டி.யு.), புருஷோத்தமன் (ஏ.ஐ.சி.சி.டி.யு.), செந்தில் (எல்.எல்.எப்.), வேதா வேணுகோபால் (எம்.எல்.எப்.),சிவக்குமார்(ஏ.ஐ.யு.டி.யு.சி), பிரேமதாசன் (அரசு ஊழியர் சம்மேளனம்)ஆகியோர்கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தொழிற்சங்க தலைவர்கள் வேலைநிறுத்த நோட்டீசை அளித்ததும் மத்திய தொழிலாளர் அமைச்சகம் கடந்த 2-ந்தேதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. ஆனால் அதில் தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து எந்த உறுதியும் அளிக்கவில்லை. இது மிகவும் கண்டனத்துக்குரியது.

தொழிலாளர் மாநாடு நடைபெற்று 4 ஆண்டுகள் ஆகிறது. இறுதியாக 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற தொழிலாளர் மாநாட்டில் பல மத்திய மந்திரிகள் கலந்துகொண்டனர். அதன்பின்னர் 2015 ஆகஸ்டு மாதத்தில் தொழிலாளர்களின் 12 அம்ச கோரிக்கைகள் பற்றி பேசுவதற்காக மத்திய மந்திரிகள் குழு அமைக்கப்பட்டது. இதுவரை அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தொழிலாளர் சட்டங்களை சிதைத்து வருவதுடன், தொழிற்சங்கங்களின் ஆலோசனைகளை மத்திய அரசு அவமதித்து வருகிறது.

அரசு பொருளாதார சரிவில் இருந்து மீள்வதற்கான முயற்சியில் தோல்வி அடைந்துவிட்டது. தேசநலனுக்கும், வளர்ச்சிக்கும் விரோதமாக பொதுத்துறை நிறுவனங்கள், இயற்கை வளங்கள் மற்றும் பிற தேசிய சொத்துகளை தனியார்மயமாக்குவதிலும், விற்பதிலும் அரசு தீவிர கவனம் செலுத்திவருகிறது.

12 விமான நிலையங்கள் ஏற்கனவே தனியாருக்கு விற்கப்பட்டுவிட்டது. ஏர் இந்தியாவை 100 சதவீதம் விற்பது என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது. பி.எஸ்.என்.எல்.- எம்.டி.என்.எல். இணைப்பின் மூலம் 93 ஆயிரம் ஊழியர்கள் விருப்ப ஓய்வு என்ற பெயரில் வேலை இழந்துள்ளனர். ரெயில்வேயை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. 150 தனியார் ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே மத்திய அரசின் இதுபோன்ற தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து அனைத்து மத்தியதொழிற்சங்கங்கள்நாளை (புதன்கிழமை) நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.இப்போராட்டம்புதுச்சேரி உள்பட பல மாநிலங்களில் முழு அடைப்பு போராட்டமாக நடைபெற உள்ளது.

வணிகர் சங்கங்கள்,வர்த்தக சபை சார்பில்பந்த் போராட்டத்தை வாபஸ் வாங்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. . தொழிற்சங்கங்களின் போராட்டம் தொழிலாளர்களின் பொருளாதாரகோரிக்கையைமுன்வைத்து மட்டும் நடைபெறவில்லை.

சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு,ஜி.எஸ்.டி.வரிவிதிப்பு, ஆன்லைன் நிறுவனங்களுக்கானஅனுமதியை திரும்பப்பெற்றுஇந்திய நாட்டின்வணிகத்தை பாதுகாக்கவேண்டும்என்ற கோரிக்கையையும் உள்ளடக்கியதுதான். அதேபோல் கடை மற்றும் நிறுவன ஊழியர்களின்சமூக பாதுகாப்பு, அமைப்புசாராதொழிலாளர்நலவாரியம், மோட்டார்வாகன சட்டதிருத்தமசோதாவை திரும்பப்பெறவும், பழையஓய்வூதிய திட்டத்தையேதொடர்ந்து செயல்படுத்த வேண்டியும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

நாளை நடைபெறக்கூடிய போராட்டம் ஒட்டுமொத்த மாற்றத்திற்கான போராட்டம்.முன்னெப்போதும்இல்லாத பொருளாதார நெருக்கடி,மதவாத தாக்குதல்கள், ஜனநாயகஉரிமை பறிப்புஆகியவற்றிலிருந்துநாட்டை காப்பதற்கானபோராட்டத்தை அனைவரும் ஒன்றிணைந்துதான் நடத்த வேண்டும். இதில் ஒதுங்கி நிற்பதுவரலாற்று பிழையாகும்.

எனவே வணிகர் சங்கங்களும், வர்த்தக அமைப்புகளும் தொழிற்சங்கங்களின்போராட்டத்துக்கு தேசபக்திஉணர்வோடு ஆதரவளித்து முழு அடைப்பு போராட்டத்தைவெற்றிபெறசெய்திட வேண்டும்.

இவ்வாறு அதில் அவர்கள் கூறியுள்ளனர்.

Next Story