மாவட்ட செய்திகள்

திருச்சியில் ஆதரவற்று சுற்றி திரிபவர்களுக்கு நேசக்கரம் நீட்டும் காவலர் + "||" + In Trichy Helpless For those who wander around the police

திருச்சியில் ஆதரவற்று சுற்றி திரிபவர்களுக்கு நேசக்கரம் நீட்டும் காவலர்

திருச்சியில் ஆதரவற்று சுற்றி திரிபவர்களுக்கு நேசக்கரம் நீட்டும் காவலர்
திருச்சியில் பணியாற்றி வரும் காவலர், ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை தேடிச் சென்று அவர்களுக்கு முடித்திருத்தம் செய்து, வேறு ஆடைகளை உடுத்தி உணவு வழங்குகிறார்.
திருச்சி,

திருச்சி மத்திய பஸ் நிலையம், ஜங்ஷன் ரெயில் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு சிலர் ஆதரவற்ற நிலையில் சுற்றி திரிவதை காண முடியும். அழுக்கு உடையுடன் ஆங்காங்கே சாலையோரத்தில் படுத்து கிடக்கும் இவர்களுக்கு ஒருசில தொண்டு நிறுவனத்தினர், நல்ல உள்ளம் படைத்தவர்கள் அவ்வப்போது உணவு வழங்கி அவர்களுடைய பசியை தீர்த்து வருகிறார்கள்.


அந்தவகையில், தமிழ்நாடு சிறப்புகாவல்படை முதலணி, திருச்சியில் பணியாற்றி வரும் காவலர் ரங்கேஸ்வரன் (வயது 25) இதுபோன்ற ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை தேடிச் சென்று அவர்களுக்கு முடித்திருத்தம் செய்து, வேறு ஆடைகளை உடுத்தி உணவு வழங்குகிறார். திருச்சியில் இதுவரை 20-க்கும் மேற்பட்டோருக்கு இதுபோன்று உதவி செய்துள்ளார். காவலர் பணியில் இருந்து கொண்டு அவ்வப்போது நேரம் கிடைக்கும்போதெல்லாம் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகிறார். தேனி மாவட்டம் கம்பம் சுருளிப்பட்டியை சேர்ந்த ரங்கேஸ்வரனின் தந்தை குமரன். விவசாயம் செய்து வருகிறார்.

இது குறித்து ரங்கேஸ்வரன் கூறுகையில், “என்ஜினீயரிங் படித்து முடித்துவிட்டு 2017-ம் ஆண்டு காவல்துறையில் பணிக்கு சேர்ந்தேன். இவர்கள் பெரும்பாலும் ஏதோ ஒரு சூழ்நிலையில் குடும்பத்தை விட்டு பிரிந்து வந்து இதுபோல் சாலைகளில் சுற்றி திரிகிறார்கள். ஒருவேளை அவர்களை தேடி குடும்பத்தினர் வரும்போது, அவர்கள் தற்போது உள்ள தோற்றத்தால், அடையாளம் தெரியாமல் போய்விடும்.

அதனால் தான் அவர்களுக்கு முடித்திருத்தம் செய்து வேறு ஆடைகளை உடுத்தி என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன். இதுபோல் மற்றவர்களும் உதவ வேண்டும்” என்றார். எந்திரமாக சுழலும் வாழ்க்கையில் எதிர்கால தேவைகளுக்காக ஓடுபவர்களுக்கிடையே ஆதரவற்றோருக்காக நேசக்கரம் நீட்டும் காவலர் ரங்கேஸ்வரனின் பணி பாராட்டுக்குரியதே, என்று அவருடைய சேவையை அறிந்தவர்கள் பாராட்டினர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருச்சியில் சினிமா பாணியில் பரபரப்பு சம்பவம்: கல்லூரி மாணவர்களிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி செல்போன்கள் பறிப்பு
திருச்சியில் சினிமா பாணியில் கல்லூரி மாணவர்களிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி செல்போன்களை பறித்த 10 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
2. திருச்சியில் பயங்கரம் பா.ஜ.க. நிர்வாகி வெட்டிக்கொலை கடைகள் அடைப்பு; பதற்றம்
திருச்சி பா.ஜ.க. நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதனால் காந்திமார்க்கெட் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு பதற்றமான சூழல் நிலவியது.
3. திருச்சியில் கொடூரம்: சிறுவனை அடித்துக்கொன்று குப்பை மேட்டில் உடல் புதைப்பு
திருச்சியில் சிறுவனை அடித்துக்கொன்று குப்பை மேட்டில் உடலை புதைத்தனர்.
4. திருச்சியில் மீண்டும் துணிகர சம்பவம்: ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து வங்கியில் ரூ.1½ கோடி கொள்ளை - மர்ம நபர் கைவரிசை
திருச்சியில் பாய்லர் ஆலை வங்கியில் ரூ.1½ கோடி கொள்ளையடிக்கப்பட்டது. குல்லா அணிந்து வந்து கைவரிசை காட்டிய மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
5. எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓட்டம்: திருச்சியில் மேலும் 3 இடங்களில் முருகன் கும்பல் கொள்ளை முயற்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தகவல்
திருச்சியில் மேலும் 3 இடங்களில் முருகன் கும்பல் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றும், அங்கு எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓட்டம் பிடித்ததாக போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தெரிவித்தார்.