வைகுண்ட ஏகாதசி விழா: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீரங்கம்,
பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதும், 108 வைணவ தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் அனைத்து விழாக்களுமே சிறப்பு வாய்ந்தவை தான் என்றாலும், ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விழாவானது பகல் பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் நடைபெறும். பன்னிரு ஆழ்வார்களில் முதன்மையானவரான நம்மாழ்வாருக்கு ஸ்ரீரங்கம் புண்ணிய தலத்தில் தான் முதன் முதலாக மகாவிஷ்ணு மோட்சம் வழங்கிய நிகழ்ச்சி நடந்து உள்ளதால் ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழாவே மற்ற பெருமாள் கோவில்களில் நடப்பதை விட சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிசம்பர் மாதம் 26-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. பகல் பத்து உற்சவத்தின் முதல் நாளான 27-ந்தேதி முதல் ஒவ்வொரு நாளும் நவரத்தின திருவாபரணங்கள், காசுமாலை அணிந்து வெவ்வேறு சிறப்பு அலங்காரங்களில் உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி, அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். அப்போது நம்பெருமாள் முன்பாக அரையர்கள் நாலாயிரம் திவ்ய பிரபந்தத்தின் திருமொழி பாசுரங்களை அபிநயம் மற்றும் வியாக்யானத்துடன் பாடினார்கள்.
பகல் பத்து உற்சவத்தின் பத்தாம் திருநாளான நேற்று முன்தினம் காலை நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இதையொட்டி நேற்று முன்தினம் இருந்தே கோவிலின் அனைத்து பிரகாரங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஏகாதசி விரதம் பூண்ட பக்தர்கள் கண்விழித்து பெருமாளின் திருநாமத்தை உச்சரித்தபடி இருந்தனர்.
கிராமங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் பெட்டி, படுக்கைகளுடன் பிரகாரங்களிலும், கோவில் வளாகத்தில் உள்ள மணல் வெளியிலும் படுத்து இருந்தனர். கோவில் உத்தரவீதிகளில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கட்டைகளுக்குள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் இரவு முழுவதும் காத்து நின்றனர்.
பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பையொட்டி கோவில் வளாகத்தில் அனைத்து பிரகாரங்களிலும் ஊட்டி, பெங்களூருவில் இருந்து கொண்டு வரப்பட்டிருந்த மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு கொடிக்கம்பம் அருகில் மஞ்சள், ஊதா, வெள்ளை நிற மலர்களால் செய்யப்பட்டிருந்த அலங்காரம் மிகவும் நன்றாக இருந்தது. இதுதவிர பரமபதவாசலை பெருமாள் கடந்து செல்லும் முன் உலா வரும் பாதை முழுவதும் மலர் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது.
அதிகாலை 4 மணிக்கு நம்பெருமாள் விருச்சிக லக்னத்தில் மூலஸ்தானத்தில் இருந்து சிம்ம கதியில் புறப்பட்டார். அப்போது நம்பெருமாள் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ரத்தின கற்களால் ஆன ரத்தின அங்கியில் பாண்டியன் கொண்டை, கிளிமாலை அணிந்து இருந்தார். சந்தனு மண்டபம், மேலப்படி வாசல், ராஜமகேந்திரன் சுற்று பகுதிகளில் பல மணி நேரம் காத்திருந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷத்துடன் நம்பெருமாளை வழிபட்டனர்.
பின்னர் நம்பெருமாள் மேலப்படி வாசல், ராஜமகேந்திரன் சுற்று வழியாக நாழிகேட்டான் வாசலுக்கு வந்தார். இதனை தொடர்ந்து தங்க கொடிமரம் வழியாக பிரகாரத்தை சுற்றிய நம்பெருமாள் விரஜா நதி மண்டபத்தை அடைந்ததும் பட்டர்கள் வேத விண்ணப்பம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை படித்தனர். அங்கு ஐதீகப்படி பக்தர்களுக்கு தீர்த்தம், பிரசாதம் வழங்கிவிட்டு நம்பெருமாள் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் அருகில் வந்தார்.
சரியாக அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் கதவு திறக்கப்பட்டது. பரமபதவாசலில் நம்பெருமாள் எழுந்தருளியபோது அவருடன் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பக்தர்களும் கோவிந்தா கோஷத்தை எழுப்பியபடியே பின் தொடர்ந்தனர். பரமபதவாசல் மேற்கூரையில் உள்ள இரண்டு தங்க பல்லி உருவங்களை பார்த்தபடியே பக்தர்கள் சொர்க்கவாசலை கடந்து சென்றனர்.
பரமபத வாசலை கடந்த நம்பெருமாள் சந்திர புஷ்கரணி, பூப்பந்தல் நடைபாதை, திருக்கொட்டகையை அடைந்தார். அங்கு இரவு முழுவதும் கண்விழித்து காத்திருந்த பக்தர்கள் ரத்தின அங்கியில் ஜொலித்துக்கொண்டிருந்த நம்பெருமாளை பக்தி பரவசத்துடன் வணங்கினார்கள். அதன் பின்னர் நம்பெருமாள் மணல் வெளியில் பக்தர்கள் மத்தியில் சுற்றி, சுற்றி சேவை சாதித்தார். இதனை தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி சேவை சாதித்தார்.
விழாவில் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் வேணு சீனிவாசன், திருநாவுக்கரசர் எம்.பி, மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி, திருச்சி மாநகராட்சி ஆணையாளர் சிவசுப்பிரமணியன் உள்பட அதிகாரிகள், பிரமுகர்கள் கலந்து கொண்டனர். வைகுண்ட ஏகாதசி விழா வருகிற 16-ந்தேதி வரை தொடர்ந்து நடைபெறும். அன்று நம்மாழ்வார் மோட்சத்துடன் விழா நிறைவு பெறும்.
வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் ராஜகோபுரம், ரெங்கா ரெங்கா கோபுரம், வடக்கு கோபுரம், வெள்ளை கோபுரம் உள்பட அனைத்து கோபுரங்களும், சன்னதி விமானங்களும், மதில் சுவர்களும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. இதனால் இரவில் கோபுரங்கள் மின்னொளியில் ஜொலித்தன. கோவில் ராஜகோபுரத்துக்கு 230 அடி உயரத்துக்கு பிரமாண்ட மாலை அணிவிக்கப்பட்டு இருந்தது.
சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாநகர போலீஸ் கமிஷனர் வரதராஜூ தலைமையில் சுமார் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். விழா ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் அதிகாரிகள், கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

Related Tags :
Next Story