பெஸ்ட் பஸ் பயணிகள் எண்ணிக்கை 34 லட்சத்தை தொட்டது


பெஸ்ட் பஸ் பயணிகள் எண்ணிக்கை 34 லட்சத்தை தொட்டது
x
தினத்தந்தி 7 Jan 2020 5:52 AM IST (Updated: 7 Jan 2020 5:52 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் பெஸ்ட் பஸ் பயணிகளின் எண்ணிக்கை 34 லட்சத்தை தொட்டுள்ளது.

மும்பை,

மும்பையில் மின்சார ரெயில்களுக்கு அடுத்தப்படியாக பொதுமக்கள் பெஸ்ட் மாநகர பஸ்களில் அதிகளவு பயணம் செய்து வருகின்றனர். எனினும் கடந்த சில ஆண்டுகளாக பெஸ்ட் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது. அதிக கட்டணம், குறைந்த சேவை ஆகியவை பயணிகள் குறைவுக்கு காரணமாக கூறப்பட்டது.

இந்தநிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பெஸ்ட் பஸ் கட்டணம் அதிரடியாக குறைக்கப்பட்டது. மேலும் பல வழித்தடங்களில் புதிய ஏ.சி. மினி பஸ் சேவைகள் தொடங்கப்பட்டன. கடந்த 2 மாதங்களில் மட்டும் மும்பையில் சுமார் 150-க்கும் அதிகமான ஏ.சி. மினி பஸ்களின் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மீண்டும் பெஸ்ட் பஸ் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தற்போது பெஸ்ட் பஸ் பயணிகளின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 34 லட்சத்தை தொட்டுவிட்டதாக பெஸ்ட் அதிகாரி ஒருவர் கூறினார்.

இது குறித்து பெஸ்ட் பொது மேலாளர் சுரேந்திரகுமார் பட்கே கூறுகையில், பயணிகளின் வசதிக்காக மேலும் புதிய பஸ் சேவைகள் தொடங்கப்படும் என உறுதி அளிக்கிறேன். பஸ் சேவைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும்’’ என்றார்.

Next Story