ரூ.200 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் மீன்பிடி துறைமுக பணிகளை கலாநிதி வீராசாமி எம்.பி. ஆய்வு
திருவொற்றியூரில் ரூ.200 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் சூரை மீன்பிடி துறைமுக பணிகளை வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவொற்றியூர்,
திருவொற்றியூர் குப்பம் பகுதியில் உள்ள காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஏற்படும் நெரிசல்களை குறைக்கும் வகையில் ரூ.200 கோடி செலவில் சூரை மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகள் நடைபெறுவது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
வடசென்னையில் மீனவர்களின் நலனுக்காக இந்த சூரை மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டு வருகிறது. 2½ ஆண்டுகளில் கட்டி முடிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த துறைமுக பணிகள் தொடங்கப்பட்டு 6 மாதங்கள் ஆகிவிட்டது.
எனவே பணிகளை துரிதப்படுத்தும் விதமாக துறைமுகம் அமைக்கும் இடத்தில் ஆய்வு செய்துள்ளோம்.
தமிழகத்தில் தி.மு.க.விற்கு மக்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது. தற்போது நடைபெற்ற ஊராட்சி தேர்தலில் பெற்ற வெற்றி மக்களிடையே தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மீதான நம்பிக்கையை அதிகரித்து இருப்பதையே காட்டுகிறது.
தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் நகராட்சி பகுதியிலும் நடைபெற்று இருந்தால், அ.தி.மு.க. கட்சி படுதோல்வியை சந்தித்து இருக்கும்.
ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது பிரதமர் மோடி ஜெயலலிதாவை இங்கு வந்து பார்த்து சென்றார். ஆனால் தற்போது இருக்கும் ஆட்சியாளர்கள் எதற்கெடுத்தாலும் டெல்லிக்கு ஓடிச்சென்று மோடியை பார்த்து வருகின்றனர்.
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு எதிர்க்கட்சி ஊராட்சி தேர்தல்களில் ஆளுங்கட்சியை வீழ்த்தி வெற்றி பெற்றிருப்பது இதுவே முதன் முறையாகும்.
மீன்வளத்துறை அமைச்சராக இருக்கும் ஜெயகுமார் மீனவர் நலனில் அக்கறை கொள்ளும்எந்த செயலையும் செய்யாமல் தேவையில்லாமல் விளம்பரத்திற்காக ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.
வடசென்னையில் குடிநீர் பிரச்சினை, பாதாள சாக்கடை பிரச்சினையை தீர்க்க முதற்கட்டமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, திருவொற்றியூர் மேற்கு பகுதி தி.மு.க. செயலாளர் கே.ப. சங்கர், கிழக்கு பகுதி செயலாளர் தி.மு.தனியரசு, குறிஞ்சி கணேசன், ஆதிகுருசாமி உட்பட பலர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story