கிருஷ்ணா ஆற்றில் நீர் நாய்கள், முதலைகள்; மக்கள் பீதி


கிருஷ்ணா ஆற்றில் நீர் நாய்கள், முதலைகள்; மக்கள் பீதி
x
தினத்தந்தி 8 Jan 2020 4:00 AM IST (Updated: 8 Jan 2020 1:03 AM IST)
t-max-icont-min-icon

ராய்ச்சூர் மாவட்டத்தில் கிருஷ்ணா ஆறு பாய்ந்தோடி வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கொட்டி தீர்த்த கனமழையால் மராட்டிய அணைகளில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

ராய்ச்சூர்,

கிருஷ்ணா ஆற்றில் காட்டாற்று வெள்ளம்இதனால்  கரைபுரண்டு ஓடியது. இதில் ஏராளமான முதலைகள், நீர்நாய்கள் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்கள் நீரில் அடித்து வரப்பட்டன. ஊருக்குள் நீர் புகுந்ததால் முதலைகள், மலைபாம்புகளும் தஞ்சமடைந்தன. 

இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இந்த நிலையில் தற்போதும் கிருஷ்ணா ஆற்றில் இருகரைகளை தொட்டப்படி தண்ணீர் செல்கிறது. 

தற்போது ராய்ச்சூர் அருகே கட்லூர் கிருஷ்ணா ஆற்றுப்படுகையில் அதிகளவில் முதலைகள், நீர்நாய்கள் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்கள் வாழ்வது தெரியவந்துள்ளது. இதனால் அந்தப் பகுதி மக்கள் கிருஷ்ணா ஆற்றில் குளிக்க செல்ல முடியாமல் கடும் பீதி அடைந்துள்ளனர்.

Next Story