குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் இடத்தை கலெக்டர் ஆய்வு
குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் இடத்தை கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.
திருச்செந்தூர்,
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான நில எடுப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டம் திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
குலசேகரன்பட்டினம் பகுதியில் சுமார் 2,200 ஏக்கர் பரப்பளவில் இஸ்ரோ மூலம் ராக்கெட் ஏவுதளம் அமைக்க நில எடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. திருச்செந்தூர் தாலுகா மாதவக்குறிச்சி கூடல்நகர் பகுதியில் 6 தாசில்தார்கள் தலைமையிலும், சாத்தான்குளம் தாலுகா பள்ளக்குறிச்சி மற்றும் படுக்கப்பத்து பகுதியில் 2 தாசில்தார்கள் தலைமையிலும் நில கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
மாதவக்குறிச்சி கூடல்நகர் பகுதியில் 25 குடியிருப்பு பகுதிகள் உள்ளது. குடியிருப்புதாரர்களுக்கு குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு இழப்பீடு வழங்க ஏதுவாக குடும்ப அட்டை வழங்கிட உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் இந்த பகுதியில் உள்ள தென்னை, பனை மற்றும் பலன் தரும் மரங்களையும் கணக்கீடுகள் செய்ய வேண்டும். நில எடுப்பு பணிகள் அரசு விதிமுறைகளின்படி விரைந்து செய்திட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகளை உரிய காலக்கட்டத்திற்குள் முடித்து கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ராக்கெட் ஏவும் இடம் அமைய உள்ள இடத்தையும் பார்வையிட்டார்.
அப்போது கூடுதல் கலெக்டர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) ஜெயராஜ், திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்ரியா மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story