பட்டதாரி பெண் தற்கொலை; காதலருக்கு 5 ஆண்டு சிறை
பட்டதாரி பெண் தற்கொலை வழக்கில் காதலருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி செசன்ஸ் கோர்ட்டு தீர்பளித்துள்ளது.
மும்பை,
மும்பை வித்யாவிகாரை சேர்ந்த முதுநிலை பட்டதாரி பெண், அதே பகுதியை சேர்ந்த அவினாஷ் கெய்க்வாட் (வயது35) என்ற வாலிபரை காதலித்து வந்தார். 2 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இதில் அந்த பெண் கர்ப்பம் ஆனதால் அவரது காதலன் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று கருவை கலைத்து உள்ளார்.
இவர்களது காதல் விவகாரம், அவினாஷ் கெய்க்வாட்டின் பெற்றோருக்கு தெரியவந்ததால் வேறொரு இடத்தில் பெண் பார்க்க முடிவு செய்தனர். இதற்கு அவினாஷ் கெய்க்வாட் சம்மதம் தெரிவித்து உள்ளார். மேலும் பட்டதாரி பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்தார்.
இதனால் மனமுடைந்த பட்டதாரி பெண் கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை 8-ந் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்தசம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவினாஷ் கெய்க்வாட் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனால் அவரை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அவினாஷ் கெய்க்வாட்டை கைது செய்தனர். மேலும் அவர் மீது மும்பை செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் அவினாஷ் கெய்க்வாட்டுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story