சீல்பாட்டாவில் பயங்கர தீ ; 12 குடோன்கள் எரிந்து நாசம்
தானே மாவட்டம் மும்ரா அருகே சீல்பாட்டா பகுதியில் தனியாருக்கு சொந்தமான பழைய பொருட்களை சேகரித்து வைக்கும் ஏராளமான குடோன்கள் உள்ளன.
தானே,
சீல்பாட்டா பகுதியில் உள்ள ஒரு குடோனில் நேற்று மதியம் 2.15 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மள மளவென அருகில் உள்ள மற்ற குடோன்களுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் 6 வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் 12 குடோன்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகியது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தில் யாரும் காயமடையவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story