மாவட்ட செய்திகள்

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 18-ந் தேதி உப்பள்ளி வருகை + "||" + Union Home Minister Amith Shah visits Uppally on 18th

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 18-ந் தேதி உப்பள்ளி வருகை

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 18-ந் தேதி உப்பள்ளி வருகை
குடியுரிமை திருத்த சட்ட விழிப்புணர்வு பிரசார கூட்டத்தில் பங்கேற்க மத்திய உள்துைற மந்திரி அமித்ஷா 18-ந் தேதி உப்பள்ளி வருகிறார் என்று பா.ஜனதா பொதுச் செயலாளர் என்.ரவிக்குமார் கூறினார்.
பெங்களூரு, 

கர்நாடக பா.ஜனதா பொதுச் செயலாளர் என்.ரவிக்குமார் எம்.எல்.சி. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணிகள் நாளை (இன்று) முதல் வருகிற 15-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பா.ஜனதா தலைவர்கள், மத்திய மந்திரிகள் மற்றும் மாநில மந்திரிகள் கலந்து கொள்கிறார்கள்.

நாளை (இன்று) ராய்ச்சூர் மாவட்டத்தில் சிந்தனூர் மற்றும் மஸ்கியில் பா.ஜனதா பொதுக்கூட்டம் நடக்கிறது. குடியுரிமை திருத்த சட்டம் குறித்து மக்களிடையே எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன. இந்த குழப்பங்களை தீர்ப்பதற்காகவே பா.ஜனதா சார்பில் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

வருகிற 11-ந் தேதி கலபுரகி, யாதகிரியில் நடைபெறும் பா.ஜனதா கூட்டத்தில் மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத்ஜோஷி பங்கேற்று பேசுகிறார். அதே நாளில் பெலகாவி மற்றும் சிக்கோடியில் நடைபெறும் கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணை மந்திரி அனுராக் தாக்குர் பங்கேற்று பேசுகிறார். 12-ந் தேதி ராய்ச்சூரில் நடைபெறும் கூட்டத்தில் மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி, 13-ந் தேதி தாவணகெரேயில் நடைபெறும் கூட்டத்தில் துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி கலந்து கொள்கிறார்.

வருகிற 18-ந் தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உப்பள்ளிக்கு வருகிறார். அங்கு நடைபெறும் குடியுரிமை திருத்த சட்ட விழிப்புணர்வு பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இதில் 1 லட்சம் ேபர் கலந்து கொள்வார்கள். காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்பட எதிர்க்கட்சிகளின் சதிகளை மக்களிடம் பகிரங்கப்படுத்துவோம். பா.ஜனதா நடத்தி வரும் குடியுரிமை திருத்த சட்ட விழிப்புணர்வு பிரசாரத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிைடத்து வருகிறது.

கர்நாடகத்தில் இதுவரை 4.65 லட்சம் வீடுகளுக்கு நேரடியாக சென்று பிரசாரம் செய்துள்ளோம். சில இடங்களில் எதிர்ப்பு கிளம்பியது. அவர்களையும் நாங்கள் சமாதானப்படுத்தி, உண்மை தகவல்களை எடுத்து கூறியுள்ளோம்.

இவ்வாறு என்.ரவிக்குமார் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அமித்ஷாவுடன் டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் இன்று சந்திப்பு
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பிற்பகல் சந்தித்து பேசுகிறார்.
2. ஜாமியா துப்பாக்கிச் சூடு: கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி காவல்துறைக்கு அமித்ஷா அறிவுறுத்தல்
ஜாமியா துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் குற்றவாளிகள் தப்ப முடியாது என்று உள்துறை அமித்ஷா தெரிவித்துள்ளார்.
3. குடியுரிமையை பறிக்க கூடிய ஒரு வழிவகையை காட்ட முடியுமா? மம்தா பானர்ஜி, ராகுல்காந்திக்கு அமித்ஷா சவால்
குடியுரிமை திருத்த சட்டத்தில், இந்த நாட்டில் உள்ள இந்திய முஸ்லிம்களின் குடியுரிமையை பறிக்க கூடிய ஒரு வழிவகையை காட்ட முடியுமா என மம்தா பானர்ஜி மற்றும் ராகுல்காந்திக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சவால் விடுத்துள்ளார்.
4. ஜே.என்.யூ மாணவர்கள் மீதான தாக்குதல்; விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க அமித்ஷா உத்தரவு
டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு டெல்லி காவல்துறைக்கு அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.
5. அமித்ஷாவை கொல்கத்தாவுக்குள் அனுமதிக்க மாட்டோம்: மேற்கு வங்காள மந்திரி மிரட்டல்
குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறும் வரை அமித்ஷாவை கொல்கத்தாவுக்குள் அனுமதிக்க மாட்டோம் என மேற்கு வங்காள மந்திரி மிரட்டல் விடுத்துள்ளார்.