ரூ.2 லட்சத்துக்கு மேல் கடன் பெற்ற விவசாயிகளுக்கு நிவாரண திட்டம்; மராட்டிய சட்டசபையில் கவர்னர் உரை
மராட்டிய சட்டசபை இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி நேற்று மராத்தி மொழியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
மும்பை,
மகாத்மா ஜோதிராவ் புலே பயிர்க்கடன் திட்டத்தின்படி ரூ.2 லட்சம் வரை விவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்தநிலையில் ரூ.2 லட்சத்திற்கு அதிகமாக பயிர்க்கடன் வாங்கியவர்களுக்கு நிவாரண திட்டத்தை அரசு இறுதி செய்து வருகிறது. மேலும் பயிர்க்கடன்களை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் புதிய திட்டங்களை மாநில அரசு விரைவில் அறிவிக்கும்.
கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களையும் அரசு அறிவிக்கும். இதன்மூலம் பல்வேறு தரப்பு மக்கள் பயனடைவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story