கடத்தூர் கல்லாறு பாலத்தின் நடுவில் தடுப்பு சுவரில் லாரி மோதியது
கடத்தூர் கல்லாறு பாலத்தின் நடுவில் தடுப்பு சுவரில் லாரி மோதி விபத்துக்குள்ளானது.
கடத்தூர்,
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா கடத்தூர் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ளது கல்லாறு பாலம். இந்த பாலத்தின் வழியாக கடத்தூரில் இருந்து பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, சேலம் உள்ளிட்ட ஊர்களுக்கு நாள்தோறும் நூற்றுக்கும் அதிகமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த நிலையில் நேற்று அதிகாலை ஐதராபாத்தில் இருந்து சேலத்திற்கு பூ பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை டிரைவர் பாபு ஓட்டி வந்தார்.
கல்லாறு பாலத்தில் வந்தபோது அதிலுள்ள சாலையின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவரில் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் பாபு உயிர் தப்பினார்.
இந்த பாலத்தின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் வாகனங்கள் அடிக்கடி மோதி விபத்து ஏற்படுகிறது. எனவே பாலத்தின் இருபுறங்களிலும் வேகத்தடைகள் அமைக்க வேண்டும், உயர்மின் கோபுர விளக்குகள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
Related Tags :
Next Story