ஓமலூர் அருகே, ஸ்டவ் வெடித்து படுகாயம் அடைந்த இளம்பெண் சாவு


ஓமலூர் அருகே, ஸ்டவ் வெடித்து படுகாயம் அடைந்த இளம்பெண் சாவு
x
தினத்தந்தி 10 Jan 2020 4:00 AM IST (Updated: 10 Jan 2020 12:48 AM IST)
t-max-icont-min-icon

ஸ்டவ் வெடித்து படுகாயம் அடைந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

ஓமலூர், 

ஓமலூர் அருகே நல்லா கவுண்டம்பட்டி செட்டியார் கடை பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 25). பாத்தியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் இளவரசி (20). இவர்கள் 2 பேருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கணவன்-மனைவி இருவரும் நல்லாகவுண்டம்பட்டி செட்டியார் கடை பகுதியில் ஒரு வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி இளவரசி வீட்டில் மண்எண்ணெய் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று ஸ்டவ் வெடித்தது. இதில் தீயில் கருகி படுகாயம் அடைந்த இளவரசியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று காலை இளவரசி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இளவரசிக்கு திருமணம் ஆகி 7 மாதங்கள் மட்டுமே ஆவதால் மேட்டூர் உதவி கலெக்டர் விசாரணைக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


Next Story