மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் 19-ந் தேதி நடக்கிறது 1,222 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல் + "||" + Polio Drip Camp at 1,222 Centers - Collector Sandeep Nanduri Information

தூத்துக்குடி மாவட்டத்தில் 19-ந் தேதி நடக்கிறது 1,222 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் 19-ந் தேதி நடக்கிறது 1,222 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் 19-ந் தேதி நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாம் 1,222 மையங்களில் நடக்கிறது என்று கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி, 

5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடத்துதல் தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 629 பயன்பெற உள்ளனர். மேலும், போலியோ சொட்டு மருந்து வழங்க 1,222 மையங்கள் செயல்பட உள்ளன. நடமாடும் மருத்துவக்குழு மூலமாக பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் முக்கிய பொது இடங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பணி நிமித்தமாக இடம் பெயர்ந்து வருபவர்களில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு மையங்கள் ஏற்படுத்தி போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்களில் பொது சுகாதாரத்துறை, அங்கன்வாடி பணியாளர்களுடன் மற்ற துறை பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ரோட்டரி சங்கங்கள் என 5 ஆயிரத்து 238 பணியாளர்கள் பணியாற்ற உள்ளனர். இந்த பணிகளுக்கு 134 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் 5 வயதிற்கு உட்பட்ட எந்த ஒரு குழந்தைகளையும் விடுபடாத வகையில் போலியோ சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் கிரு‌‌ஷ்ணலீலா, மாவட்ட சமூக நல அலுவலர் தனலட்சுமி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) உமாசங்கர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு தனி வார்டு - கலெக்டர் நேரில் ஆய்வு
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த வார்டை கலெக்டர் சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
2. கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி: சீனாவுக்கு சென்று வந்த 4 பேர் தொடர் கண்காணிப்பு - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக, சீனாவுக்கு சென்று வந்த 4 பேர் வீடுகளில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
3. அயோடின் அல்லாத உப்பு உற்பத்தியாளர்கள் மீது நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை
அயோடின் அல்லாத உப்பு உற்பத்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி எச்சரிக்கை விடுத்தார்.
4. தூத்துக்குடியில் தொழுநோய் விழிப்புணர்வு பேரணி - கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்
தூத்துக்குடியில் தொழுநோய் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று தொடங்கி வைத்தார்.
5. வருகிற 1-ந் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல் - கலெக்டர் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 1-ந் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-