மாவட்ட செய்திகள்

குடியரசு தினவிழா ஆலோசனை கூட்டம் - கலெக்டர் தலைமையில் நடந்தது + "||" + Republic Day Advisory Meeting - Held by the Collector

குடியரசு தினவிழா ஆலோசனை கூட்டம் - கலெக்டர் தலைமையில் நடந்தது

குடியரசு தினவிழா ஆலோசனை கூட்டம் - கலெக்டர் தலைமையில் நடந்தது
குடியரசு தினவிழாவையொட்டி மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடா்பான ஆலோ சனை கூட்டம் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது.
சிவகங்கை, 

வருகிற 26-ந்தேதி நடைபெறவுள்ள குடியரசு தினவிழாவையொட்டி மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடா்பான ஆலோசனை கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

இந்திய திருநாட்டின் சிறப்பு வாய்ந்த விழாவாக ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு நடைபெறவுள்ள குடியரசு தினவிழாவினை அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு சிறப்பாக நடத்திட வேண்டும். குறிப்பாக தியாகிகளை கவுரவிக்கும் வகையில் அவா்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்கி சிறப்பிக்க வேண்டும். கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ள மாணவ-மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் சான்றுகள் வழங்கி சிறப்பிக்க வேண்டும்.

நலத்திட்ட உதவி பெறுபவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் லதா, மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மங்களேஷ்வரன், மகளிர் திட்ட அலுவலா் அருண்மணி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குனா் வடிவேல், வருவாய் கோட்டாட்சியா்கள் செல்வகுமாரி, சங்கரநாராயணன், கலெக்டரின் நோ்முக உதவியாளா் ராமபிரதீபன், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியா் காளிமுத்தன், நிலஅளவைத்துறை உதவி இயக்குனா் யோகராஜ், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ராஜா மற்றும் அரசு அலுவலா்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இறந்த மாற்றுத்திறனாளியின் குடும்பத்துக்கு ரூ.17 ஆயிரம் நிதி உதவி - கலெக்டர் வழங்கினார்
இறந்த மாற்றுத்திறனாளியின் குடும்பத்துக்கு ரூ.17 ஆயிரம் நிதி உதவியை கலெக்டர் ஜெயகாந்தன் வழங்கினார்.
2. நெல் கொள்முதல் நிலையங்கள் மேலும் 7 இடங்களில் திறக்கப்படும் - கலெக்டர் தகவல்
மாவட்டத்தில் ஏற்கனவே 38 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்ட நிலையில், மேலும் 7 இடத்தில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.
3. குடியரசு தின விழாவில் 129 பேருக்கு நலத்திட்ட உதவி - கலெக்டர் வழங்கினார்
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் கலெக்டர் ஜெயகாந்தன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
4. மாற்றுத்திறனாளிகளுக்காக வழிபாட்டு தலங்களில் சாய்தள பாதை - கலெக்டர் தகவல்
மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியில் சென்று வர வசதியாக வழிபாட்டு தலங்களில் சாய்தள பாதை அமைத்து தரப்படும் என கலெக்டர் ஜெயகாந்தன் கூறினார்.
5. மலேசியாவில் கொத்தடிமையாக இருந்த வாலிபர் மீட்பு - கலெக்டர் ஜெயகாந்தன் நடவடிக்கை
மலேசியாவில் கொத்தடிமையாக இருந்த வாலிபர் கலெக்டர் ஜெயகாந்தன் நடவடிக்கையால் மீட்கப்பட்டார்.