பொங்கல் பரிசு தொகுப்பு; கலெக்டர் ஆய்வு


பொங்கல் பரிசு தொகுப்பு; கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 10 Jan 2020 4:36 AM IST (Updated: 10 Jan 2020 4:36 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் காந்தி நகர் மற்றும் நரசிங்கராயர் தெருவில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படுவதை கலெக்டர் பொன்னையா நேரில் சென்று ஆய்வு செய்தார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 635 ரேஷன் கடைகள் மூலம் 3,37,990 ரேஷன்கார்டுதாரர்களுக்கு ரூ. 1000-த்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்பு துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வருகிற 13-ந்தேதி வரை வழங்கப்படுகிறது. ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவதற்கு கூட்டுறவு துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் முனைப்புடன் செயல்பட்டு கண்காணித்து வருகின்றனர்.

காஞ்சீபுரம் காந்தி நகர் மற்றும் நரசிங்கராயர் தெருவில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படுவதை கலெக்டர் பொன்னையா நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு பொதுமக்கள் வரிசையில் நின்று பொங்கல் பரிசு வாங்குவதை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதல்நிலை மண்டல மேலாளர் செந்தில்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் கஸ்தூரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story