காரைக்கால் மாவட்ட எல்லைகளில் மத்திய காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆய்வு


காரைக்கால் மாவட்ட எல்லைகளில் மத்திய காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆய்வு
x
தினத்தந்தி 10 Jan 2020 5:55 AM IST (Updated: 10 Jan 2020 5:55 AM IST)
t-max-icont-min-icon

காரைக்கால் மாவட்ட எல்லைகளில் காவிரி நீர் வரும் பகுதியில் மத்திய காவிரி நீர் ஒழுங்காற்று குழு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

காரைக்கால்,

கர்நாடக மாநிலத்தில் காவிரியில் திறக்கப்படும் தண்ணீரில் காரைக்காலுக்கும் பங்கு உள்ளது. இதில் தமிழக பகுதியில் இருந்து காரைக்கால் மாவட்டத்திற்கு கடந்த பல ஆண்டுகளாக முறையாக தண்ணீர் வருவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இந்த நிலையில், மத்திய காவிரிநீர் ஒழுங்காற்று குழுவினர் அதன் தலைவர் நவீன் குமார் தலைமையில் மத்திய காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் செயலர் நீரஜ்குமார் உள்பட 16 பேர் கொண்ட குழுவினர் நேற்று காரைக்காலுக்கு வந்தனர்.

அவர்கள் மாவட்ட எல்லையான நல்லாத்தூர், அன்னவாசல் உள்ளிட்ட காவிரி ஆற்றுப்படுகைகளை நேரில் பார்வையிட்டனர். தமிழகத்தில் இருந்து காரைக்காலுக்கு வரும் நீரின் அளவை கணக்கிடும் இடங்களை அவர்கள் ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் புதுச்சேரி புறப்பட்டுச் சென்றனர்.

ஆய்வின் போது மத்திய குழுவினரிடம் பல்வேறு கோரிக்கைகளை தெரிவிக்க விவசாயிகள் காத்திருந்தனர். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Next Story