உள்ளாட்சி தேர்தலை நடத்த மத்திய அரசின் உத்தரவின் பேரிலேயே மாநில தேர்தல் ஆணையர் தேர்வு - கவர்னர் கிரண்பெடி தகவல்


உள்ளாட்சி தேர்தலை நடத்த மத்திய அரசின் உத்தரவின் பேரிலேயே மாநில தேர்தல் ஆணையர் தேர்வு - கவர்னர் கிரண்பெடி தகவல்
x
தினத்தந்தி 10 Jan 2020 6:06 AM IST (Updated: 10 Jan 2020 6:06 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தலை நடத்த மத்திய அரசின் உத்தரவின்பேரிலேயே மாநில தேர்தல் ஆணையர் தேர்வு என்று கவர்னர் கிரண்பெடி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

கவர்னர் கிரண்பெடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசு சார்பில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு (சிவப்பு நிற ரேஷன்கார்டுதாரர்கள்) தலா ரூ.20 கிலோ அரிசியும், மஞ்சள் நிற ரேஷன்கார்டு தாரர்களுக்கு 10 கிலோ இலவச அரிசியும் வழங்கப்படுகிறது. கடந்த 2016 ஜூன் மாதம் முதல் 17 மாதம் இலவச அரிசியும், 10 மாதம் அரிசிக்கான பணமும் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

இப்போது அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் அரிசிக்கான பணம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இதனால் அவர்கள் விருப்பப்பட்ட அரிசியை வெளி மார்க்கெட்டில் வாங்கிக்கொள்ள முடிகிறது.

எந்தவித கசிவும் இன்றி பயனாளிகளின் வங்கிக்கணக்கில் பணம் சென்று சேருகிறது. இது புதுவை மக்களின் மீதான நலனன்றி வேறு என்ன? காண்டிராக்டர்களுக்கு பணம் வழங்க வேண்டியதில்லை. ஒவ்வொரு மாதமும் கோடிக்கணக்கான பணம் காப்பாற்றப்படுகிறது.

தற்போது உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். அவரை வெளிப்படையான முறையில் தேர்ந்தெடுக்க மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இலவச அரிசிக்கு பதிலாக பணம் வழங்குவது, மாநில தேர்தல் ஆணையர் நியமனம் ஆகியன மத்திய அரசின் உத்தரவின்பேரிலேயே நடக்கின்றன. இதுபொதுமக்களின் தகவலுக்காக தெரிவிக்கப்படுகிறது. கவர்னரின் அலுவலகம் புதுவை மக்களின் நலனுக்காகவே செயல்படுகிறது.

இவ்வாறு அதில் கவர்னர் கிரண்பெடி தெரிவித்துள்ளார்.

Next Story