கோலார் தங்கவயல் அரசு ஆஸ்பத்திரியில் ரூபகலா சசிதர் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு
கோலார் தங்கவயல் அரசு ஆஸ்பத்திரியில் ரூபகலா சசிதர் எம்.எல்.ஏ. திடீரென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்து கொண்டார்.
கோலார் தங்கவயல்,
கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டையில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இந்த நிலையில் நேற்று, கோலார் தங்கவயல் தொகுதி எம்.எல்.ஏ. ரூபகலா சசிதர், அந்த அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று திடீரென்று ஆய்வு செய்தார். கோலார் தங்கவயல் அரசு ஆஸ்பத்திரியில் சுத்திரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
அதனை பார்வையிட்டு ஆய்வு செய்த ரூபகலா சசிதர், அந்த பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். பின்னர் அவர் ஆஸ்பத்திரியில் ஒவ்வொரு வார்டாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது தங்கவயல் ஆஸ்பத்திரியில் உள்நோயாளிகளாக இருப்பவர்களிடம் குறைகளை கேட்டறிந்து கொண்டார். மேலும் அவர்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதாக உறுதி அளித்தார். மேலும் நோயாளிகள் படுத்திருக்கும் படுக்கை விரிப்புகள் இல்லாமல் இருந்தது. இதனை பார்த்த அவர், ஊழியர்களிடம் கேட்டார்.
அப்போது, படுக்கை விரிப்புகள் சுத்தம் செய்ய கொடுக்கப்பட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் கோபம் கொண்ட ரூபகலா சசிதர், படுக்கைக்கு மாற்று விரிப்புகள் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
அவருடன் ஆஸ்பத்திரி டாக்டர் சிவக்குமார், நகரசபை கமிஷனர் ராஜூ ஆகியோர் இருந்தனர்.
Related Tags :
Next Story