மத்தூர் அருகே, திருமண ஆசை காட்டி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர்


மத்தூர் அருகே, திருமண ஆசை காட்டி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர்
x
தினத்தந்தி 11 Jan 2020 4:00 AM IST (Updated: 11 Jan 2020 12:07 AM IST)
t-max-icont-min-icon

மத்தூர் அருகே திருமண ஆசை காட்டி சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மத்தூர், 

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு, வீட்டில் இருந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த அண்ணாமலை என்பவரது மகன் பூவரசன் (வயது 24). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

இந்தநிலையில் அந்த சிறுமியும், பூவரசனும் கடந்த 3 ஆண்டுகளாக நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரிடம் பூவரசன் உல்லாசமாக இருந்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். தற்போது அவர் 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

மேலும், பூவரசனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவர் கேட்டுள்ளார். ஆனால் பூவரசன் சிறுமியை திருமணம் செய்ய மறுத்ததுடன் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமி மத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கற்பகம் விசாரணை நடத்தி, போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து பூவரசனை வலைவீசி தேடி வருகிறார்.

Next Story