சிறுமியை மானபங்கம் செய்த புகாரில் சிக்கிய போலீஸ் டி.ஐ.ஜி. நிஷிகாந்த் மோரே பணி இடைநீக்கம்


சிறுமியை மானபங்கம் செய்த புகாரில் சிக்கிய போலீஸ் டி.ஐ.ஜி. நிஷிகாந்த் மோரே பணி இடைநீக்கம்
x

சிறுமியை மானபங்கம் செய்த புகாரில் சிக்கிய போலீஸ் டி.ஐ.ஜி. நிஷிகாந்த் மோரே பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

மும்பை, 

புனேயில் போலீஸ் டி.ஐ.ஜி. யாக இருப்பவர் நிஷிகாந்த் மோரே. இவர் மீது நவிமும்பையை சேர்ந்த 17 வயது சிறுமி மானபங்க புகார் அளித்து இருந்தார். இந்த புகார் குறித்து நவிமும்பை போலீசார் டி.ஐ.ஜி. மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் டி.ஐ.ஜி. நிஷிகாந்த் மோரே முன்ஜாமீன் கேட்டு பன்வெல் செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு போலீஸ் டி.ஐ.ஜி. நிஷிகாந்த் மோரேவுக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்து அவரது மனுவை தள்ளுபடி செய்தது.

இந்தநிலையில் மானபங்க புகாரில் சிக்கி உள்ள டி.ஐ.ஜி. நிஷிகாந்த் மோரே நேற்று அதிரடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கூறினார். மேலும் டி.ஐ.ஜி. மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை மிரட்டியதாக முதல்- மந்திரி உத்தவ் தாக்கரேவின் கார் டிரைவரான போலீஸ்காரர் தின்கர் சால்வேவும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார், என்பது குறிப்பிடத்தக்கது.

தின்கர் சால்வே ஏற்கனவே டி.ஐ.ஜி. நிஷிகாந்த் மோரேவுக்கு கார் டிரைவராக இருந்தவர் ஆவார்.

Next Story