நாய் குறுக்கே வந்ததால் விபரீதம்: மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து மளிகை கடைக்காரர் சாவு


நாய் குறுக்கே வந்ததால் விபரீதம்: மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து மளிகை கடைக்காரர் சாவு
x
தினத்தந்தி 12 Jan 2020 4:00 AM IST (Updated: 11 Jan 2020 10:14 PM IST)
t-max-icont-min-icon

நாய் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து மளிகை கடைக்காரர் பரிதாபமாக இறந்தார்.

பேட்டை, 

நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள கல்லிடைக்குறிச்சி சின்ன பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சேக் மைதீன் (வயது 62). இவர் அங்குள்ள அகஸ்தியர்புரத்தில் மளிகை கடை நடத்தி வந்தார்.

நேற்று முன்தினம் இரவு இவர் தனது மகனுடன் நெல்லை டவுனுக்கு வந்து கடைக்கு தேவையான பொருட்கள் வாங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை சேக் மைதீன் ஓட்டினார்.

நெல்லையை அடுத்த சுத்தமல்லி அருகே உள்ள கீழக்கல்லூர் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, நாய் ஒன்று குறுக்கே வந்தது. இதனால் அதன் மீது மோதிவிடாமல் இருக்க சேக் மைதீன் திடீர் பிரேக் போட்டார். இருப்பினும், நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சேக் மைதீனும், அவருடைய மகனும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து காயம் அடைந்தனர்.

உடனே அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் சேக் மைதீன் நேற்று அதிகாலை பரிதாபமக இறந்தார்.

இந்த விபத்து குறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நாய் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து மளிகை கடைக்காரர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story