காஞ்சீபுரம் மாவட்டத்தில் மேலும் 15 ரவுடிகள் கைது


காஞ்சீபுரம் மாவட்டத்தில் மேலும் 15 ரவுடிகள் கைது
x
தினத்தந்தி 12 Jan 2020 4:00 AM IST (Updated: 11 Jan 2020 11:38 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய மேலும் 15 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் 42 பேர் கடந்த மாதத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமுண்டீஸ்வரி உத்தரவின் பேரில், நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 6 பேரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், மேலும் 15 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் மேலும் சிற குற்றவாளிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story