எல்லாபுரம் ஒன்றிய குழுத்தலைவர், துணைத்தலைவர் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி


எல்லாபுரம் ஒன்றிய குழுத்தலைவர், துணைத்தலைவர் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி
x
தினத்தந்தி 12 Jan 2020 3:45 AM IST (Updated: 11 Jan 2020 11:38 PM IST)
t-max-icont-min-icon

எல்லாபுரம் ஒன்றிய குழுத்தலைவர், துணைத்தலைவர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியது.

பெரியபாளையம், 

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்தில் 20 ஒன்றிய குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அ.தி.மு.க. சார்பில் 9 பேரும், பா.ம.க. சார்பில் ஒருவரும், தி.மு.க. - 5 பேரும், காங்கிரஸ் கட்சி-1, கம்யூனிஸ்டு-1, சுயச்சைகள் 3 பேர் என மொத்தம் 20 பேர் உள்ளனர். இந்த நிலையில், பெரியபாளையத்தில் உள்ள எல்லாபுரம் ஒன்றிய அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஒன்றிய குழுத்தலைவர் மற்றும் ஒன்றிய துணைத்தலைவர் தேர்தல் நேற்று நடைபெற்றது.

இதில் அ.தி.மு.க. சார்பில் 12-வது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் ரமேஷ் போட்டியிட்டார். இவர் 13 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் 3-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் குணசேகரன் போட்டியிட்டார். இவர் 7 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.

ஒன்றிய துணைத்தலைவர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் 8-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் போட்டியிட்டார். இவர் 13 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 16-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் ரவி 7 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.

தேர்தல் நடத்தும் அலுவலர் பெருமாள் முன்னிலையில் தேர்தல் நடைபெற்றது. வெற்றிபெற்ற ஒன்றிய குழுத்தலைவர், துணைத்தலைவருக்கு திருவள்ளூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், பொன்னேரி எம்.எல்.ஏ.வுமான சிறுணியம் பலராமன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story