திருவள்ளூர் அருகே, மனைவி பிரிந்த ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை


திருவள்ளூர் அருகே, மனைவி பிரிந்த ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 12 Jan 2020 4:00 AM IST (Updated: 11 Jan 2020 11:38 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே மனைவி பிரிந்த ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த கூடப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 37). கூலித்தொழிலாளி. இவருக்கு லட்சுமி (35) என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். முத்துக்குமார் குடிப்பழக்கம் உடையவர். இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே கடந்த சில மாதங்களாக குடும்பத்தகராறு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து லட்சுமி தன்னுடைய கணவருடன் கோபித்துக்கொண்டு தனது மகன்களுடன் தனியாக சென்று விட்டார்.

தன் மனைவி மற்றும் மகன்கள் பிரிந்து சென்ற ஏக்கத்தில் இருந்த முத்துக்குமார் நேற்று முன்தினம் குடிபோதையில் தன்னுடைய வீட்டுக்கு சென்று அங்கு மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து லட்சுமி வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

Next Story