மாவட்ட செய்திகள்

எடியூரப்பா டெல்லி பயணம் திடீர் ரத்து; கட்சி மேலிடம் அனுமதி மறுப்பு? + "||" + Yeddyurappa Delhi trip abruptly canceled; Denial of party clearance?

எடியூரப்பா டெல்லி பயணம் திடீர் ரத்து; கட்சி மேலிடம் அனுமதி மறுப்பு?

எடியூரப்பா டெல்லி பயணம் திடீர் ரத்து;  கட்சி மேலிடம் அனுமதி மறுப்பு?
மந்திரிசபை விரிவாக்கம் குறித்து அமித்ஷாவை சந்தித்து பேச முதல்-மந்திரி எடியூரப்பா டெல்லி செல்ல இருந்த பயணம் திடீரென்று ரத்து செய்யப்பட்டு உள்ளது.
பெங்களூரு, 

கர்நாடக மந்திரிசபையை விரிவாக்கம் செய்வது குறித்து பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவிடம் ஆலோசனை நடத்தவும், கட்சி மேலிட தலைவர்களின் அனுமதியை பெறவும் முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று டெல்லிக்கு புறப்பட்டு செல்ல முடிவு செய்திருந்தார்.

மேலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து மந்திரிசபை விரிவாக்கம் குறித்து பேசவும் எடியூரப்பா தீர்மானித்திருந்தார். இந்த நிலையில், முதல்-மந்திரி எடியூரப்பாவின் டெல்லி பயணம் ரத்து செய்யப்படுவதாக நேற்று திடீரென்று அறிவிக்கப்பட்டது.

எடியூரப்பா டெல்லி செல்வதற்கு கட்சி மேலிடம் அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் டெல்லி பயணத்தை ரத்து செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் எடியூரப்பாவின் டெல்லி பயணம் ரத்தாகி இருப்பதால் சங்கராந்தி பண்டிகைக்கு பின்பு நடைபெற இருந்த மந்திரிசபை விரிவாக்கம் மீண்டும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லி பயணம் ரத்து குறித்து பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களிடம் கூறியதாவது:-

மந்திரிசபை விரிவாக்கம் தொடர்பாக கட்சியின் மேலிட தலைவர்களை சந்தித்து பேசுவதற்காக டெல்லி செல்வதற்கு முடிவு செய்திருந்தேன். பா.ஜனதா தேசிய தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா வருகிற 17 மற்றும் 18-ந் தேதிகளில் கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். கர்நாடகத்திற்கு அவர் வந்ததும், மந்திரிசபை விரிவாக்கம் தொடர்பாக பேச இருக்கிறேன். இதன் காரணமாக டெல்லி பயணத்தை ரத்து செய்துள்ளேன்.

கர்நாடகத்திற்கு வரும் அமித்ஷாவிடம் மந்திரிசபை விரிவாக்கம் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பேசப்படும். அதன்பிறகு மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகாவில் ஏப்.20-க்கு பிறகு ஊரடங்கில் சில தளர்வுகள்: எடியூரப்பா அறிவிப்பு
கர்நாடகாவில் ஏப்.20-க்கு பிறகு ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்படும் என்று எடியூரப்பா அறிவித்துள்ளார்.
2. மாநிலத்தின் வளர்ச்சிதான் அரசின் நோக்கம்; எடியூரப்பா சொல்கிறார்
மாநிலத்தின் வளர்ச்சிதான் அரசின் முக்கிய நோக்கம் என்று பட்ஜெட் தாக்கலின்போது முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
3. இது குழந்தைகளுக்கான பட்ஜெட்; எடியூரப்பா பெருமிதம்
நான் தாக்கல் செய்திருப்பது குழந்தைகளுக்கான பட்ஜெட் என்று முதல்-மந்திரி எடியூரப்பா பெருமையுடன் கூறினார்.
4. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வன்முறை தேவையற்றது; சட்டசபையில் எடியூரப்பா பேச்சு
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வன்முறை தேவையற்றது என்று சட்டசபையில் எடியூரப்பா கூறினார்.
5. காங்கிரசுக்கு, முதல்-மந்திரி எடியூரப்பா வேண்டுகோள்
சட்டசபை சுமுகமாக நடைபெற ஒத்துழைக்க வேண்டும் என்று காங்கிரசுக்கு, முதல்-மந்திரி எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.