நாகர்கோவிலில் 3 மையங்களில் நடந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை 2,789 பேர் எழுதினர் போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு


நாகர்கோவிலில் 3 மையங்களில் நடந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை 2,789 பேர் எழுதினர் போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு
x
தினத்தந்தி 13 Jan 2020 4:15 AM IST (Updated: 12 Jan 2020 8:39 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் 3 மையங்களில் நடந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எழுத்து தேர்வை 2,789 பேர் எழுதினர். போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு ஆய்வு செய்தார்.

நாகர்கோவில்,

தமிழ்நாடு சீருடை தேர்வு வாரியம் மூலம் சார்பு, சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு நேற்று தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. நேற்று பொது பிரிவினருக்கான தேர்வு நடைபெற்றது.

இந்த தேர்வை எழுத குமரி மாவட்டம் முழுவதும் மொத்தம் 3974 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் ஆண்கள் 3,378 பேரும், பெண்கள் 596 பேரும் ஆவார்கள். இதற்காக நாகர்கோவிலில் பொன்ஜெஸ்லி என்ஜினீயரிங் கல்லூரி, ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி, சுங்கான்கடையில் உள்ள செயின்ட் சேவியர்ஸ் கல்லூரி ஆகிய 3 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. நாகர்கோவிலில் உள்ள 3 மையங்களிலும் 2,789 பேர் தேர்வு எழுதினர். 1,185 பேர் தேர்வு எழுத வரவில்லை.

போலீஸ் டி.ஐ.ஜி.ஆய்வு

பொன்ஜெஸ்லி கல்லூரியில் நடந்த தேர்வை நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.தேர்வு எழுத வந்தவர்கள் பலத்த சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

இன்று(திங்கட்கிழமை) போலீஸ் பணியில் இருப்பவர்களுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான தேர்வு நடைபெறுகிறது.

Next Story