மாவட்ட செய்திகள்

குருவிகுளம் அருகே, விடுதியில் பிளஸ்-1 மாணவி தற்கொலை - போலீசார் விசாரணை + "||" + Near Kuruvikulam, In hostel Plus-1 student suicide Police are investigating

குருவிகுளம் அருகே, விடுதியில் பிளஸ்-1 மாணவி தற்கொலை - போலீசார் விசாரணை

குருவிகுளம் அருகே, விடுதியில் பிளஸ்-1 மாணவி தற்கொலை - போலீசார் விசாரணை
குருவிகுளம் அருகே விடுதியில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவேங்கடம், 

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா குருவிகுளம் அருகே உள்ள வடக்கு அழகுநாச்சியாபுரம் மேலக்காலனியை சேர்ந்தவர் கனகராஜ். இவர் சைக்கிளில் பிளாஸ்டிக் பாத்திர வியாபாரம் செய்து வருகிறார். 

இவருடைய மனைவி பூங்கொடி. இவர்களுக்கு 2 மகள்கள். மூத்த மகள் தங்க பிரியா (வயது 16). இவர் குருவிகுளத்தில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். அருகில் உள்ள அரசு மாணவியர் விடுதியில் தங்கி படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளிக்கூடம் முடிந்ததும் விடுதிக்கு சென்ற தங்க பிரியா, விடுமுறை நாளான நேற்று ஊருக்கு செல்லாமல் விடுதியிலேயே தங்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விடுதி அறையில் தனியாக இருந்த தங்க பிரியா நேற்று மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவல் அறிந்ததும் குருவிகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இதுதொடர்பாக விடுதி காப்பாளர் கொடுத்த புகாரின் பேரில் குருவிகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவி தங்க பிரியாவின் தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சுஷாந்த் தற்கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற கோரிய எனது பேரன் பர்த் பவார் முதிர்ச்சியற்றவர் சரத் பவார் கூறுகிறார்
சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மற்ற கோரிய தனது பேரன் பர்த் பவார் முதிர்ச்சி அற்றவர் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறினார்.
2. கணவன்-மனைவி தீக்குளித்து தற்கொலை: மகன்-மகளும் காயம்
குடும்ப பிரச்சினையில் கணவன்-மனைவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டனர். இந்த சம்பவத்தில் அவர்களுடைய மகன், மகளும் தீக்காயம் அடைந்தனர்.
3. அவமானம் தாங்காமல் தாய்-தந்தை தற்கொலை
விவாகரத்து பெற்று வீட்டில் வாழ்ந்து வந்த தனது மகள், காதலனுடன் ஓட்டம் பிடித்ததால் அவமானம் தாங்காமல் அவரது பெற்றோர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
4. பெண் தீக்குளித்து சாவு: தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்யாததை கண்டித்து சாலை மறியல்
பெண் தீக்குளித்து உயிரிழந்த சம்பவத்தில், தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்யாததை கண்டித்து சாலை மறியல் நடத்தப்பட்டது.
5. கும்மிடிப்பூண்டி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை
கும்மிடிப்பூண்டி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக உறவினர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.