மப்பேடு ஊராட்சியில் பூட்டி கிடக்கும் கிராம சேவை மைய கட்டிடம் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


மப்பேடு ஊராட்சியில் பூட்டி கிடக்கும் கிராம சேவை மைய கட்டிடம் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 13 Jan 2020 3:45 AM IST (Updated: 12 Jan 2020 11:17 PM IST)
t-max-icont-min-icon

மப்பேடு ஊராட்சியில் கிராம சேவை மைய கட்டிடம் பூட்டி கிடக்கிறது. அதை திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 2014 -2015 திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக புதிய கிராம சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது.

இந்த கிராம சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை பயன்பாட்டுக்கு வராமல் பூட்டியே கிடக்கிறது.

இதனால் மப்பேடு மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இந்த கிராம சேவை மைய கட்டிடத்தை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே மப்பேடு ஊராட்சியில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாடு இல்லாமல் பூட்டியே கிடக்கும் இந்த கிராம சேவை மைய கட்டிடத்தை அரசு அதிகாரிகள் இனிமேலும் காலதாமதம் செய்யாமல் விரைந்து நடவடிக்கை எடுத்து திறந்து வைக்க வேண்டும் என்று பொாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story