பயங்கரவாதிகளின் புகலிடமாக கர்நாடகம் மாற அனுமதிக்க மாட்டோம் - மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி


பயங்கரவாதிகளின் புகலிடமாக கர்நாடகம் மாற அனுமதிக்க மாட்டோம் - மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
x
தினத்தந்தி 13 Jan 2020 4:30 AM IST (Updated: 13 Jan 2020 12:00 AM IST)
t-max-icont-min-icon

பயங்கரவாதிகளின் புகலிடமாக கர்நாடகம் மாற அனுமதிக்க மாட்டோம் என்று மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார். போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை கார்வாரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெங்களூரு, 

தமிழகம் மற்றும் டெல்லி போலீசார் பெங்களூருவில் பயங்கரவாதிகள் 3 பேரை ஏற்கனவே கைது செய்துள்ளனர். இன்னும் 2 பேரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைதானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கர்நாடகத்தில் பயங்கரவாதிகள் எங்கெங்கு கூட்டம் நடத்தினர் என்பது குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. கர்நாடகத்தை எக்காரணம் கொண்டும் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாற அனுமதிக்க மாட்டோம். நாங்கள், போலீசாரை சட்டம்-ஒழுங்கை காப்பாற்றுதல் மற்றும் பாதுகாப்பு பணிக்காக மட்டுமே பயன்படுத்தி கொண்டோம். ஆனால் குமாரசாமி ஆட்சியில் போலீசாரை எந்த பணிக்காக பயன்படுத்தி கொண்டனர் என்பது அனைவருக்கும் தெரியும்.

மக்களை திசை திருப்பும் முயற்சியில் குமாரசாமி ஈடுபட்டுள்ளார். போலீசார் நேர்மையாக தங்களின் பணியை செய்துள்ளனர். மந்திரிசபை விரிவாக்கம் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா முடிவு செய்வார். எனது இலாகாவை மாற்றுவது குறித்து முதல்-மந்திரி என்ன முடிவு எடுக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Next Story