‘பசுவை தொடுவதால் எதிர்மறை எண்ணங்கள் நீங்கும்’ - காங்கிரஸ் பெண் மந்திரி சொல்கிறார்
‘பசுவை தொடுவதால் எதிர்மறை எண்ணங்கள் நீங்கும்’ என காங்கிரஸ் பெண் மந்திரி கூறியுள்ளார்.
மும்பை,
பசுக்கள் குறித்த பாரதீய ஜனதா தலைவர்கள் பேச்சு அடிக்கடி சர்ச்சைகளுக்கு வழிவகுக்கும். இதே பாணியில் காங்கிரஸ் பெண் மந்திரி ஒருவரும் பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. காங்கிரஸ் சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரியாக பதவி ஏற்றவர் யசோமதி தாக்குர்.
இவர் அமராவதி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “பசுவை தொட்டால் நம்மிடம் உள்ள எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் தெரித்து ஓடிவிடும். நமது கலாசாரத்திலும் இதுகுறித்து கூறப்பட்டுள்ளது” என்றார். இவரது இந்த பேச்சு பர பரப்பை ஏற்படுத்தியது.
இதுபோன்று பேசுவது இவருக்கு ஒன்றும் புதிதில்லை. முன்னதாக ஜில்லா பரிஷத் தேர்தல் பிரசாரத்தின்போது இவர், “எதிர்க்கட்சி வேட்பாளர் கொடுக்கும் பணத்தை மறுக்காமல் பெற்றுக்கொள்ளுங்கள். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் தான் ஓட்டுப்போட வேண்டும்” என்று பேசினார். அதுமட்டும் இன்றி “நாங்கள் இப்போது தான் ஆட்சிக்கு வந்துள்ளோம். எங்கள் பைகள் இன்னும் சூடாக இல்லை” என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார் என்பது குறிப் பிடத்தக்கது.
இந்தநிலையில் தனது பசு குறித்த பேச்சுக்கு பதிலளித்த மந்திரி யசோமதி தாக்குர், “பசு ஒரு புனித விலங்கு. மேலும், அது ஒரு பசுவோ அல்லது வேறு எந்த விலங்காக இருந்தாலும், அவற்றை தொடும்போது அன்பான உணர்வை பெற முடியும். நான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது?” என்றார்.
Related Tags :
Next Story